(Reading time: 12 - 23 minutes)

ல்லாம் நிறைவாகவே போய்க்கொண்டிருந்தாலும், திலீப் சுதீப்பிடம் ஒட்டாமல் இருப்பது சுந்தரியின் கவனத்தில் விழுந்தது…

சிறு பிள்ளை தானே, போக போக சரியாகிடுவான் என்றெண்ணியிருந்தவர் நாட்கள் ஆக ஆக அது விரிசலாக மாறிவிடக்கூடாதே என்று எண்ணி பயந்தார்…

அப்போது தான் வேலை விஷயமாக சுதீப் மும்பை செல்ல நேர, அவனும் அங்கேயே வருடக்கணக்கில் தங்கி வேலை பார்க்கும்படி ஆனது…

அந்த சமயத்தில் தான், சுந்தரி நோய்வாய்ப்பட்டு யாரும் எதிர்பாராத வகையில் இறந்து போனார் திடீரென…

தாயின் இழப்பு திலீப்பை முழுதாக புரட்டி போட்டது… சிறு விஷயத்திற்கும் தாயிடம் வந்து நிற்பான் அவன் எப்போதும்…… அப்படி பட்ட நிலையில் அவரது இழப்பு அவனை மிகவும் வாட்டியதென்றே சொல்லலாம்…

மகனின் மனதை மாற்றவே, அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கவேண்டுமென்று எண்ணினார் சண்முகம்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

விஷயம் கேள்விப்பட்டு துடித்துப்போனாள் விசாலம்… தன் மகள் தான் அந்த வீட்டின் மூத்த மருமகள் என்ற எண்ணம் சிதைந்து போகப்போகிறது என்ற கவலை அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது…

“சுந்தரியம்மா எங்கிட்ட என் பொண்ணு தான் இந்த வீட்டு மருமகன்னு சொன்னாங்க…” என கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு திலீப்பின் கல்யாண விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து…

உன் பொண்ணு தான் இந்த வீட்டு மருமகன்னு சொன்ன சுந்தரி உயிரோடில்லாத போது, அவள் யாரிடம் சென்று அந்த வாக்கை நிறைவேற்ற சொல்லி போராடுவாள்?...

சண்முகத்திடமா?... இல்லை திலீப்பிடமா?...

யாரிடமும் எதுவும் சென்று அவளால் நியாயம் கேட்க முடியாதே…. சுந்தரி விசாலத்திடம் கூறியது சண்முகத்திற்கோ, திலீப்பிற்கோ கொஞ்சம் கூட தெரியாதே… அப்படிப்பட்ட நிலையில் அவள் வாதம் எப்படி சபையில் செல்லும்?...

சுந்தரி இருந்திருந்தால், இந்த திருமணம் நடந்திருக்குமே…. ஆம் சண்முகத்திற்கு மனைவி சொல்லே வேதவாக்கு… மகனுக்கோ அதைவிட வேறொன்று உலகத்தில் முக்கியமில்லை…

இந்த எண்ணம் மனதில் வந்து வந்து போக, விசாலம் தவித்தாள்… தன் ஒரே மகளின் வாழ்க்கையும் தன்னை போல் ஆகிடுமோ என்றெண்ணி அஞ்சினாள்… அந்த அச்சம் அவளை உறங்கவிடாமல் செய்தது…

சண்முகம் மடமடவென்று மகனுக்கு பெண் பார்த்து நிச்சயமும் செய்துவிட, விசாலத்திற்கு உயிரே அற்று போனது…

சரி… நடப்பது தானே நடக்கும்… என்றெண்ணி தன்னையே தேற்றிக்கொண்டு அவள் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தாள் திலீப்பின் திருமணத்திற்கும் முன்னே…

சண்முகமே முன் நின்று திருமணத்தையும் நடத்தி வைத்தார்… ஆரம்பத்தில் ஒழுக்கமானவனாக இருந்த அவள் மகனின் கணவன், அனைத்து கெட்டப்பழக்கத்திற்கும் அடிமையானான் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே…

சண்முகமும் இடையிட்டு அவனுக்கு உபதேசம் செய்து அறிவுரை கூற, இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன்… என வாக்களிக்கும் அவன் பேச்சு மறுநாளே மாயமாகிவிடும் காற்றோடு காற்றாக…

குடித்து குடித்து குடல் எல்லாம் வெந்து, வெகு சீக்கிரத்திலேயே அவனும் தன் உயிரை விட்டு விட, திருமணமாகி ஆறு மாதம் கூட நிறைவடைந்திருக்கவில்லை…

தனக்காவது தன் மகள் என்ற உறவை தன் கணவன் விட்டு வைத்துவிட்டு போயிருந்தான்… ஆனால் தன் மகளுக்கோ, இப்படி ஒரு நிலை வந்ததை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை கொஞ்சமும்…

சரயூ திலீப்பின் மனைவியாக அவனது வீட்டில் உலாவர, ஏனோ சரயூ இடத்தையும், தன் மகளின் தற்போதைய நிலையையும் தானாகவே அவள் மனது ஒப்பிட்டு பார்த்தது…

சரயூவின் இடத்தில் தன் மகள் இருந்திருந்தால், தான் நினைத்தது போலவே அனைத்தும் நடந்திருந்தால், தன் மகளின் வாழ்வு இப்படி பட்டு போயிருக்காதே என்ற எண்ணம் அவளை நிழல் போல் பின் தொடர, சரயூவின் மேல் தன்னையும் அறியாமலே வஞ்சம் வளர்க்க தொடங்கினாள் விசாலம்…

சரயூ சமையல் நன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டதுமே, அவள் சமைக்கும் சாப்பாட்டில் உப்போ, காரமோ எதாவது ஒன்றை அதிகப்படுத்திவிடுவாள்…

“அவ நல்லா பழகுற வரைக்கும் நானே சமைக்கிறேன்… சின்னப்பொண்ணு தான… இப்போதான பழகுறா… போக போக சரியாகிடும்…” என அனைவரின் முன்னிலையிலும் விசாலம் சொல்லுகையில், திலீப்பும் தன் மனைவி அடுப்படியில் கஷ்டப்படவேண்டாமே என்றெண்ணினான்…

அதன் பின் அவள் சமைக்க சென்றாலும், “நீ இரு… நான் சமைக்கிறேன்…” என சமையலை முடித்திடுவாள் விசாலம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.