(Reading time: 24 - 48 minutes)

'ஷூர் ..டாக்டர்..' தேங்க் யூ சோ மச்..' ஒரு ஆழமான சுவாசத்துடன் சொன்னான் அவன்.

சிறிது நேரத்துக்கு பேசிக்கொண்டிருந்து விட்டு புவனா கிளம்ப, இருக்கையில் கண்மூடி சாய்ந்தான் விஷ்வா.

'நான் ஒன்று நினைக்க நீ ஒன்று நினைக்கிறாயே என் இறைவா!!!'

அப்போதும் அவன் மேஜையில் சிரித்தபடியே நின்றிருந்தான் அந்த சின்ன கண்ணன்.

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!!!!'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

ருத்துவமனையின் கான்டீனில் அமர்ந்திருந்தனர் அப்பா, அம்மா அருண் மூவரும்.

'எனக்கு அபர்ணாவை ரொம்ப பிடிச்சிருக்குப்பா. சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.' மூன்றாவது முறையாக சொல்லிக்கொண்டிருந்தான் அருண். 

'சரிடா.. உனக்கு அவளை பிடிச்சிருக்கு. நாங்க மறுக்கலை. ஆனா ஏன் கல்யாணம் இப்போவே நடக்கணும்ன்னு அவசர படறேன்னு தான் கேட்கிறேன்..' தாள மாட்டாமல் கேட்டார் அம்மா. அவனது ஆசைக்கு குறுக்கே நிற்கும் எண்ணம் அப்பா, அம்மா இருவருக்கும் இல்லைதான். இருந்தாலும் இன்றே நடக்க வேண்டுமா இது???

'இன்னைக்குதான் இந்துக்கு சர்ஜரி முடிஞ்சிருக்கு இன்னைக்கே போய் உனக்கு கல்யாணம் பேசணுமா....' குரலில் தயக்கத்தை பூசிக்கொண்டு கேட்டார் அம்மா.

'இதிலே என்னமா இருக்கு. அதான் விஷ்வா வாய்விட்டு தன் மனசிலே இருக்கிறதை சொல்லிட்டார்ன்னு சொல்றீங்க இல்ல. அவர் அபர்ணாவோட சொந்த அத்தை பையன் தானே ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா பேசி முடிங்க.. இந்துக்கும் சீக்கிரம் நல்லது நடக்கட்டும்' அருண் சொல்ல யோசனயுடனே பார்த்தார் அப்பா.

'அதுதான் அடுத்த வாரம் பூரா நாள் சரி இல்லைன்னு அப்பா சொல்றார் இல்ல. அடுத்த மாசம் மார்கழி மாசம் வேறே அதுக்குள்ளே எங்க கல்யாணம் முடிஞ்சா நல்லது. கல்யாணம் முடிஞ்சு என் பொண்டாட்டியா அவ அமெரிக்கா போகணும்...' உறுதியாக சொன்னான் அருண்.

'அமெரிக்காவா??? எதுக்குடா???' அவசரமாக கேட்டார் அப்பா.

'ஆபீஸ்லே போக சொல்றாங்கபா. அவ மாட்டேன்னு வேலையை விட்டுட்டா. எனக்கு அதிலே கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை அவ போகணும். போகட்டும். கொஞ்ச நாள் சம்பாதிச்சிட்டு வரட்டும்.' அருண் சொல்ல அம்மா பதில் பேசவே இல்லை.

'எனக்கு உடன்பாடு இல்லை..' என அருண் சொன்ன விதத்தில் அவன் கொடுத்த அழுத்தம் அதன் அர்த்தம் அம்மாவுக்கு புரியாமல் இல்லை.  

'அவன் சொல்றதும் ஒரு வகையிலே நல்லதுதான்' என்றார் அப்பா. 'இப்போ இந்த டிசம்பர்குள்ளே அவன் கல்யாணம் நடந்தா அவன் ஜாதகப்படி அவனுக்கு ரொம்ப நல்லது. இன்னைக்கு நாள் நல்லாதான் இருக்கு. பேசிடுவோம்...' முடிவெடுத்தார் அப்பா.

அவரது வார்த்தைகளில் அருணுக்குள் பெருக்கெடுத்த சந்தோஷத்தை பிரதிபலித்தது அவன் முகம்.

'இங்கே பாரு அருண் , அவ அமெரிக்கா போகலைன்னாலும் பரவாயில்லை. எனக்கு அது முக்கியமில்லை. என்னை பொறுத்தவரை நம்ம குடும்பத்துக்கு சீக்கிரமே ஒரு வாரிசு வரணும். அதுதான் எனக்கு முக்கியம். அவ ஜாதகத்திலே புத்திர பாக்கியம் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும். அது இருந்தா உடனே கல்யாணத்தை பேசிடுவோம்...' சொன்னார் அப்பா. இதற்கும் பதில் பேசவில்லை அம்மா.

'சரி அருண் நீ சித்தியோட கொஞ்ச நேரம் ஹாஸ்பிடல்லே துணைக்கு இரு. நானும் அம்மாவும் வாங்கவேண்டியதெல்லாம் வாங்கிட்டு வரோம். ஆறு மணிக்கு அவங்க வீட்டுக்கு போவோம்...' சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து நகர்ந்தார் அப்பா.

அம்மா இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, மகன் அவருடன் அமர்ந்திருக்க

'அருண்...' என்றார்  அம்மா.

'என்னமா.. வேறே ஏதாவது சாப்பிடறியா??? அம்மாவிடம் பேசும் போது அவன் குரலில் மென்மை ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்தான் எப்போதும்.

'அம்மா சொல்றதை கொஞ்சம் கேளுப்பா... அந்த பொண்ணு அபர்ணா பாவம்டா. அவளுக்கு வெளிநாடு போக இஷ்டமில்லைனா விட்டுடு. நீ நினைச்ச மாதிரியே அவ இருக்கணும்ன்னு நீ நினைக்கறது ரொம்ப தப்பு. அம்மா முகம் வாடினா நீ வருத்த படறேதானே??? இந்துவுக்கு ஒண்ணுன்னா பதறிப்போறேதானே??? அதே மாதிரி தானே அவளும்.....'

'இல்லமா ... இந்த காலத்து பொண்ணுங்க மாதிரி இருக்க மாட்டேங்கறாமா அவ, எல்லாத்துக்கும் பயம். இது வேண்டாம்கிறது....அது மாட்டேங்கிறது... இது எல்லாம் இந்த காலத்துக்கு சரியா வருமா.??? என் ஃபிரண்ட்ஸ்ஸே அப்புறம் கேலி பண்ணுவாங்க' என்றபடியே கைபேசியின் மீது பார்வையை வைத்துக்கொண்டான் அருண் .

'அருண்..... ஃபிரண்ட்ஸ் பத்தி எல்லாம் விடு,,, உனக்கு அவளை பிடிச்சிருக்கா???' சற்றே அழுத்தமாக கேட்டார் அம்மா.

'அதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு..' கையிலிருந்த கைப்பேசியை துழாவியபடியே சொன்னான் அருண்.

'என்னை பார்த்து பதில் சொல்லு... அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்குதானே...' திரும்பி அம்மாவின் முகம் பார்த்தான் அருண்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.