(Reading time: 24 - 48 minutes)

'பிரமாதமா இருக்கு ஜாதகம்..' மலர்ந்த  புன்னகையுடன் சான்றிதழ் கொடுத்தபடியே நிமிர்ந்தார் அருண் அப்பா.. 'புத்திர பாக்கியம் அமோகமா இருக்கு,,,'

அஸ்வினி உதட்டை சுழித்து பார்வையை திருப்பிக்கொள்ள அங்கெங்கே கொஞ்சம் நிம்மிதி பெருமூச்சுக்கள் எழ. இப்போதான் அபர்ணாவை பார்த்து புன்னகைத்தான் அருண்.

அடுத்த சில நிமிடங்களில் மாறின தாம்பூல தட்டுக்கள். நடக்கும் நிகழ்வுகள் அவன் இதயத்தை கூறு போட்டுக்கொண்டிருக்கும் நொடியிலும், அந்த வலியையும்  தாண்டி பரத்தின் மனம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது.

'இந்த வீட்டுக்கு சென்று அபர்ணா நிஜமாகவே மகிழ்ச்சியாக இருப்பாளா???'

அடுத்ததாக வந்தது அந்த தருணம். மோதிரம் மாற்றிக்கொள்ளும் தருணம். எழுந்து அருண் அருகில் வந்தாள் அபர்ணா. அப்போது தன்னையும் அறியாமல் அவள் பார்வை ஒரு முறை பரத்தை தொட்டு வர, ஏனோ வலித்தது அவளுக்கு.

'இதெல்லாம் ஏன் இவன் கண்முன்னாலேயே நடக்கிறது??? எந்த சூழ்நிலையிலும் அவனுக்கு வலி கொடுப்பதை விரும்பியதில்லையே அவள்!!!

எல்லா மன அழுத்தங்களையும் தாண்டியும் அவள் அடி மனதில் அழகாய் ஒரு சந்தோஷம். தனது மனதில் குடிக்கொண்டவனை கைபிடிக்க போகும் சந்தோஷம். அதனாலேயே அவள் இதழ்கள் சூடிக்கொண்டன புன்னகையை. அப்போது திடீரென சொன்னார் அருண் அப்பா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

'டேய்.. சரியா செக் பண்ணிக்கோ இது அபர்ணாதானான்னு அஸ்வினியா இருக்க போகுது.' பெரிய ஜோக்கை சொன்னதை போல் அவர் சிரிக்க அவருடன் சிரிப்பில் இணைந்துக்கொண்டான் அருண்.

'என்னடா சிரிக்கறே ரெண்டு பேரிலே யாரா இருந்தாலும் சரிங்கறியோ???' அவர் தொடர அருண் இதற்கும் சிரிக்க இப்போது மொத்தமாக காணாமல் போனது அபர்ணாவின் புன்னகை.

'எனக்கு அபர்ணாதான் வேண்டும் என சொல்லி இருக்க வேண்டாமா அவன்???'

'ச்சே..' வெறுப்பு கலந்த குரலில் சொல்லிக்கொண்டாள் அஸ்வினி. அசைவற்ற பார்வையில் அவர்களை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் பரத்.

பரத் அவர்கள் இருவரையும் பார்த்திருக்க அவளுக்கு அணிவிக்க வேண்டிய நிச்சியதார்த்த மோதிரத்தை கையில் எடுத்தான் அருண். உயிரை பறிப்பது என்று வார்த்தையில் கேள்விப்பட்டிருக்கிறான் பரத்!!! அது உண்மையிலேயே இதுதானோ??? தாறுமாறாக இருந்தது அவன் இதய துடிப்பு. அங்கிருந்து சட்டென எழுந்து விலகவும் முடியவில்லை அவனால்.

அப்போது நேரம் காலம் தெரியாமல் பரத்தின் நண்பன் அழைத்து வைக்க

'நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்' வயலினில் கரையும் ராஜாவின் இசையில் ஒலித்தது பரத்தின் கைப்பேசி. ஏனோ உயிர் அவன் வரை கீறியது அந்த இசை. தடதடத்தது அவன் இதயம். கைப்பேசியை எடுத்து சட்டென துண்டித்தான் அழைப்பை. விரல்கள் நடந்குவதை போல் ஒரு உணர்வு அவனுக்கு.

அந்த நொடியில் என்ன நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்து என்றே தெரியவில்லை. அருண் கையில் இருந்து தவறியது அந்த மோதிரம். கீழே விழுந்து உருண்டு நேராக பரத்தின் காலடியில் வந்து நின்றது அது!!!. பரத்தின் பார்வை விழுந்தது அந்த மோதிரத்தின் மீது!!!

Episode # 12

Episode # 14

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.