(Reading time: 24 - 48 minutes)

'திலே எல்லாம் ஒரு குறையும் இல்லேமா.. இப்போ கொஞ்ச நாளா நான் அவ மேலே கோபமா இருந்தேன். அவ கூட பேசலை. ஆனா அவ திரும்ப திரும்ப என்னோட பேச முயற்சி பண்ணிட்டுதான் இருந்தா...' அம்மாவிடம் ஒப்புகொண்டான் மகன்.

'அதுதான்டா சொல்றேன். நான் பார்த்தவரைக்கும் அவ ரொம்ப நல்ல பொண்ணு அருண். அவ கண்ணிலே தண்ணி வராம பார்த்துக்கோ...'.. அது தவிர வேறெதுவும் முக்கியமில்லைன்னு நினைச்சுக்கோ ... 'கோபம்... அதுதான் உன்கிட்டே இருக்கிற பெரிய குறை. கொஞ்சம் கொஞ்சமா அதை மாத்திக்கோ. இல்லைனா அது உன் அறிவை மறைச்சிடும். எதையாவது பெருசா இழக்க வேண்டி இருக்கும்.. அது வேண்டாம்டா கண்ணா..  ப்ளீஸ்...' கெஞ்சலாக முடித்தார் அம்மா.

இறைவன் நேராக வருவதில்லை, ஆனால் யார் மூலமாகவாவது நமக்கு சொல்ல வேண்டியதை சொல்கிறான். அருணுக்கு அம்மாவின் மூலமாக சொன்னான் அவன், அவன் சொன்னதை கேட்டிருக்க வேண்டாமா அருண்!!!

அம்மா பேசிவிட்டு போன பிறகு அருண் மனம் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'ஆம்... நான் சற்றே அதிகமாகத்தான் அவளை வருத்திவிட்டேனோ??? அன்று நான் ஜீன்ஸ் டி.ஷர்ட்டில் வர சொன்ன போதுகூட வரத்தானே செய்தாள் அவள். நான் வர நேரமானதால்தானே அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தாள்??? பாவம்தான் அவள்!!!'

அவள் முகம் நினைவில் ஆடி மறைய அவன் இதழ்களில் புன்னகை ஓட்டம். கைப்பேசியின் மீது பரபரத்தன அவன் விரல்கள். ஒரு முறை அவளை அழைத்து பேசலாமா??? மகிழ்ந்து போய் விட மாட்டாளா???

கோபம் பிறந்த மறுநொடியில் வெளிப்படுத்தும் பலரால் தோன்றிய மறுநொடியில் அன்பை வெளிப்படுத்திவிட முடிவதில்லை.

'அதுதான் நேரிலே சந்திக்க போகிறோமே!!! அப்போது பேசிக்கொள்ளாலாம்!!!' கைப்பேசியை  பாக்கெட்டினுள் திணித்துக்கொண்டு நடந்தான் அருண்!!!

மாலை ஐந்து மணி

இதுவரை தான் வரும் செய்தியை அபர்ணா வீட்டுக்கு தெரியப்படுத்தி இருக்கவில்லை அருண்.

'நீங்க விடுங்கப்பா. சும்மா சர்ப்ரைஸ் கொடுப்போம். இயல்பாக அவங்க வீட்டிலே எப்படி இருப்பாங்கன்னு நமக்கும் தெரியும்..' அவர்களை அழைக்க நினைத்த அப்பாவையும் தடுத்திருந்தான் மகன்.

இந்துவும் கண் விழித்து விட, மூவரும் பூ, பழ தட்டுக்களுடன் கிளம்பி வந்துக்கொண்டிருந்தனர் அபர்ணாவின் வீட்டை நோக்கி.

தனது எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாத வருத்தம் இருந்த போதும், தான் விரும்பியவளுடன் திருமணம் என்ற எண்ணம் அருணுக்குள் சந்தோஷ அருவியை தோற்றுவிக்கத்தான் செய்தது. கார் நகர்ந்துக்கொண்டிருக்க ஜன்னலுக்கு வெளியே தெரியும் அத்தனையும் அழகாக இருப்பதை போலவே தோன்றியது அவனுக்கு. அதே நேரத்தில் அம்மா சொன்னதும் நினைவுக்கு வரத்தான் செய்தது.

'சரி குறைத்துக்கொள்கிறேன். என் கோபங்களை குறைத்துக்கொள்ள முயல்கிறேன் என்னவளே உனக்காக!!!' சொல்லிக்கொண்டான் அவன் தனக்குள்ளே.

அதே நேரத்தில் அபர்ணா வீட்டு வாசலில் இன்னொரு கார் வந்து நிற்க அதிலிருந்து கை நிறைய இனிப்புகளுடன் இறங்கினான் பரத். அவன் வீட்டினுள் நுழைய சந்தோஷ புன்னகையுடன் எதிர்க்கொண்டார் அவள் அப்பா.

'வாப்பா...' வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் அவனை.

'எப்படி இருக்கீங்க அங்கிள்???"

நான் நல்லா இருக்கேன்பா. 'நீ வரப்போறேன்னு வீட்டிலே ஏக கலாட்டா பண்ணி வெச்சிருக்கா இந்த அஸ்வினி பொண்ணு.' சிரித்தார் அவர்.

'கலாட்டாவா???" வியப்பில் விரிந்த கண்களுடனும், மலர்ந்த முகத்துடனும் உள்ளே நுழைந்தான் பரத். அங்கே அவன் பார்த்த காட்சியில் அவன் விழிகள் இன்னமும் அதிகமாகவே விரிந்தன.

அங்கே நின்றிருந்தனர் அபர்ணாவும் அஸ்வினியும்!!! இருவரும் ஒரே மாதிரியான சேலை உடுத்தி, ஒரே மாதிரியான அலங்காரத்துடன் அருகருகே நின்றிருந்தனர். அச்சு அசலாக ஒருவரின் பிரதி ஒருவர் என பார்த்தவர்கள் ஒரு கணம் குழம்பிப்போகும் வகையில் இருவரும் நிற்க, அவர்களருகே குறும்பு சிரிப்புடன் அஷோக்.

கண்சிமிட்ட மறந்து போய் பரத் நின்றுவிட, சொன்னான் அஷோக்.

ரெண்டு பேரிலே யார் அபர்ணா யார் அஸ்வினினு கண்டுபிடிங்க பாப்போம்'

முதலில் ஒப்புக்கொள்ளவில்லை அபர்ணா. 'ஒரு சின்ன டெஸ்ட்தானே. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.' என்றாள் அஸ்வினி.

போராடித்தான் இந்த விளையாட்டுக்கு அவளை சம்மதிக்க வைத்திருந்தாள் அஸ்வினி. அவள் மீது எத்தனை நேசம் வைத்திருக்கிறான் பரத் என தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அஸ்வினியிடம். அதை அவள் நேரடியாக சொல்லிக்கொள்ளவில்லை அபர்ணாவிடம்.

அழகான புன்னகையுடன் இருவரையும் பார்த்தபடியே நின்றான் பரத். அபர்ணாவின் இதயம் தறிக்கெட்டு துடித்துக்கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.