(Reading time: 24 - 48 minutes)

ரியாக மூன்று நொடிகள் கடக்க கொஞ்சம் கூட குழப்பமே இல்லாத பார்வையுடன் நேராக அபர்ணாவிடம் சென்று இனிப்புகளை நீட்டினான் பரத்.

'டேக் இட் அபர்ணா..' அவன் பார்வையிலும் புன்னகையிலும் அவள் மீதிருக்கும் காதல் மட்டுமே இருந்தது.

ஆச்சர்யத்தில் உறைந்து போய் அபர்ணா நின்றிருக்க, வீட்டில் உள்ளவர்கள் எல்லாருமே வியப்பில் விழுந்து  பேச மறந்துதான் நின்றனர். அஸ்வினிதான் சுதாரித்து நடுவில் புகுந்தாள். அபர்ணா எப்போதும் பேசும் பாவத்துடனே சொன்னாள் அவள்.

'நான்தான் அபர்ணா. நீங்க தோத்து போயிட்டீங்க..'

அபர்ணாவை விட்டு விழி அகற்றாமல் முகம் மலர சிரித்தான் பரத்

'வெரி சாரி அஸ்வினி. நீ என்னை குழப்பவே முடியாது.' என்றான் அவன்  'என் அபர்ணாவை எனக்கு தெரியும்!!!' என்ன அபர்ணா நான் சொல்றது கரெக்ட்தானே???'  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

குரல் எங்கே எழுகிறது அங்கே??? 'ஆம்...' என தலை அசைத்தவள் இனிப்புகளை வாங்கிக்கொண்டு உள்ளே நகர்ந்து விட்டிருந்தாள்.

'என் அபர்ணாவை எனக்கு தெரியும்' அந்த வார்த்தைகள் அப்பாவை ஒரு நொடி விலுக்கென குலுக்கி நிமிர்த்தியது.

'அது எப்படி அவ்வளவு கரெக்டா, இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க???' பரத்தை கேட்டாள் அஸ்வினி

அகம் மலர்ந்த சிரிப்பு பரத்திடம் 'அதெல்லாம் தொழில் ரகசியம்..'

'அந்த ரகசியத்தைதான் சொல்லுங்கங்கிறேன்..' விடவில்லை அவள்.

'சும்மா இல்லமா எட்டு வருஷம்....' என ஏதோ சொல்ல வந்தவன் அவளது அப்பாவின் கூர்ந்த பார்வையில் ஏனோ நிறுத்திக்கொண்டான்.

'எட்டு வருஷமா???' .... அஸ்வனி  

'ம்???' என்றவன் அங்கே நின்றிருந்த அவள் அம்மாவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சோபாவில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

சரியாக அந்த நொடியில் அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றது அந்த கார். அதிலிருந்து இறங்கினர் மூவரும். அருண் அவனது அப்பா, அம்மா என மூவரும்!!!

கையில் பழம், பூ சகிதம் மூவரும் வீட்டுக்குள் நுழைய, அங்கே இருந்த மற்றவர்கள் கொஞ்சம் திகைத்து போய் நிற்க அதிர்ந்து போய் எழுந்தான் பரத். பார்த்த மாத்திரத்தில் அவர்கள் எதற்காக வந்திருக்கின்றனர் என்று புரிந்தது அவனுக்கு. 

அபர்ணாவின் அப்பா சட்டென அருணை அடையாளம் கண்டுக்கொண்டவராக முன்னால் சென்று வரவேற்றார் அவர்களை.

'வாங்க.... வாங்க நான் உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷம்...'

முகம் முழுக்க சிரிப்புடன் உள்ளே வந்தான் அருண். அவன் பார்வை முதலில் சென்று அடைந்தது அங்கே இருந்த அஸ்வினியிடம். சேலை உடுத்தி நின்றவள் அபர்ணா என்றே நினைத்துக்கொண்டான் அவன்.

தன்னை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்து போகும் என நினைத்துக்கொண்டவன் அவள் அருகில் வர கொஞ்சம் இறுகிப்போன அஸ்வினியின் முகத்தை குழப்பம் கலந்த பார்வையால் அளந்தபடி

'ஹாய் அபர்ணா...' என்றான் மெதுவாக.

என்ன நினைத்தாளோ சிரித்துவிட்டாள் அஸ்வினி. காரணம் புரியவில்லை அவனுக்கு.

'ஏன் சிரிக்கறே??? என்றவனின் பார்வையில் விழுந்தான் பரத்.

'இவன் எங்கே இங்கே வந்தான்???' சுறுசுறுவென பற்றிக்கொண்டது அருணுக்கு.

அதற்குள் சம்பிரதாய அறிமுங்கள் நலம் விசாரிப்புகளுடன் எல்லாரும் அமர அவர்கள் குரல் கேட்டு உள்ளிருந்து வெளியே வந்தாள் அபர்ணா.

அருணும் அவனது பெற்றோர்களும், அவர்கள் வந்திருந்த தோரணையும் பார்த்தவுடன் அவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என புரிய, எதிர்பாராத இந்த இன்ப அதிர்ச்சியில் உள்ளம் கொஞ்சம் நெகிழ்ந்து போக, முகம் மலர்ந்து போக மெதுமெதுவாக நடந்து வந்து அஸ்வினியின் அருகில் நின்றாள் அவள்.

ஒரு முறை சுடும் பார்வையால் பரத்தை உரசிவிட்டு திரும்பினான் அருண். இன்னமும் அவள்தான் அபர்ணா என்று புரியவில்லை அருணுக்கு.

'ஹேய்... அஸ்வினி... நீங்களும் என்ன அபர்ணா மாதிரி ஆறு முழம் புடவையை சுத்திட்டு தயவு செய்து நீங்களாவது மாறாம இருங்க...' என்றான் அவன் அபர்ணாவை பார்த்து.

அபர்ணாவினுள்ளே கொஞ்சம் கசப்பான ஏமாற்றம் பரவியது.. இருப்பினும் கஷ்டப்பட்டு புன்னகையை தவழ விட்டுக்கொண்டாள் இதழ்களில்

கலகலவென .சிரித்தபடியே ஒரு முறை பரத்தை பார்த்து கண் சிமிட்டினாள் அஸ்வினி. 'இன்னமும் புரியவில்லையா இவனுக்கு???"

அப்போதுதான் புரிந்தது அருணுக்கு சிரிப்பவள் அஸ்வினி என!!! பரத் அஸ்வினியை பார்த்து சிந்திய புன்னகை இன்னமும் வெறுப்பை விதைத்தது அவனுக்குள்ளே.

'இது என்ன விளையாட்டு. நான்சென்ஸ்...' கசப்பாய் வார்த்தைகளை துப்பிவிட்டு போய் சோபாவில் அம்மாவின் அமர்ந்துக்கொண்டான் அருண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.