(Reading time: 4 - 7 minutes)

Chillzee Year End Awards – 2016

CHILLZEE 2016 YEAR END AWARDS

Chillzee 2016 ஆண்டு இறுதி விருதுகள்

முதலில், வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டு வாக்களித்த ஒவ்வொருவருக்கும் எங்களின் அன்பு கலந்த நன்றிகள்.

And, Here we go with the announcement friends!


அறிமுக எழுத்தாளர்!

ஸ்ரீ, சுபஸ்ரீ
ஸ்ரீ

ஸ்ரீ எழுதிய என்னுள் நிறைந்தவனே கதை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை! Chillzee சிறுகதை போட்டி 2016ல் ‘பிறந்தநாள்‘ சிறுகதை மூலம் நமக்கு அறிமுகமானவர் ஸ்ரீ! அருமையாக எழுதும் திறமை கொண்டவர்.

இன்னும் பல பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் ஸ்ரீ.

 

சுபஸ்ரீ

சுபஸ்ரீஇருக்கா இல்லையா” தொடங்கி “கிருமி” வரை பல பரிணாமங்களை எழுத்தில் நமக்கு காட்டி இருக்கிறார். திறமை மிக்க நல்ல எழுத்தாளர்.

அது மட்டுமல்லாமல் சக எழுத்தாளர்களை கருத்துக்களால் ஊக்குவிப்பதிலும் சிறந்தவர்.

இன்னும் பல பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சுபஸ்ரீ

 


ஆல் – இன் - ஆல் எழுத்தாளர்!

புவனேஸ்வரி, தேவி 
புவனேஸ்வரி

புவனேஸ்வரி பற்றி தெரியாதவர்கள் Chillzeeயில் இருப்பது அரிது.

வேறென்ன வேண்டும் நீ போதுமே துவங்கி, இது பேய்க் காதல் வரை ஃபாஸ்ட் ட்ராக்கில் போய்க் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர்!

மென்மையான கதைகள் மட்டுமல்லாமல் அதிரடியான கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் தயங்காதவர்!

புவி என்று நட்புக்களாலும், ‘கண்ணம்மா‘ என Chillzee மக்களாலும் அன்புடன் அழைக்கப் படுபவர்.

வாழ்த்துக்கள் புவி aka கண்ணம்மா!

 

தேவி!

Chillzeeக்கு தினமும் புத்துணர்வை கொடுப்பவர் தேவி.

கதை, கட்டுரை மட்டுமல்லாமல், சிரிப்பு துணுக்குகள் மற்றும் பாடல்கள் பகுதிக்கும் பல பல பங்களிப்புகள் தந்திருப்பவர்.

காதல் உறவே முதல் பாயும் மழை நீயே வரை நம் மனதில் நிற்கும் கதைகளாக பகிர்பவர்.

ஒவ்வொரு படைப்பிற்கும் தனித் தனியே சிறப்பான கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டு அனைவரையும் ஊக்குவிப்பதில் சிறந்தவர்.

வாழ்த்துக்கள் தேவி!

 


எழுத்தாளர்

வத்சலா, மீரா 
வத்சலா

Chillzee சிறுகதைப் போட்டி 2014ல் ‘பொக்கிஷம்’ கதை மூலம் அறிமுகமான ஒரு பொக்கிஷம் வத்சலா!

மெல்லிய உணர்வுகளை அழகாக வார்த்தைகளில் வடிவமைக்க கூடியவர். குடும்பக் கதைகளிலும் ‘சஸ்பென்ஸ்’ கொண்டு வந்து நம்மை கதையுடன் ஒன்ற வைக்கும் திறமை உள்ளவர்!

வத்சலாவின் மனதிலே ஒரு பாட்டு முதல் வார்த்தை தவறி விட்டேன் கண்ணம்மா வரை ஒவ்வொரு கதையும் அழகான இனிமையான அனுபவம்.

வாழ்த்துக்கள் ‘மேஜிக்’ வத்சலா!

 

மீரா ராம்

2014ல் ‘நெஞ்சத்திலே நிறைந்தவனே’ கதை மூலம் அறிமுகமானவர் மீரா ராம். மனதை மயக்கும் கதை, கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

காதலை அழகாக சொல்வதிலும், நம் மனதை வார்த்தைகளால் மயக்குவதிலும் அதீத திறமை பெற்றவர்.

காதல் நதியில் முதல் மருவக் காதல் கொண்டேன் வரை மீரா எழுதி இருக்கும் எல்லா கதைகளுமே மனதை கொள்ளை கொள்ளும் கதைகள்!

“காதல் மழை” என்ற பட்ட பெயருக்கு ‘apt’ ஆனவர்!

வாழ்த்துக்கள் மீரா!

 


கதை

காதலை உணர்ந்தது உன்னிடமே – சித்ரா வெ

முதல் முதல் செய்யும் எதுவுமே ஸ்பெஷலான விஷயம் தான்...!

அதுவும் அந்த ‘முதல்’ சிறப்பாக அமைந்து விட்டால் சந்தோஷத்திற்கு கேட்க வேண்டுமா என்ன?

தன்னுடைய முதல் கதை ‘காதலை உணர்ந்தது உன்னிடமே’ மூலம் நம் அனைவர் மனதையும் கவர்ந்தவர் சித்ரா.

காதல் கலந்த அழகிய குடும்ப பாங்கான கதையை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா, என்று நம்மை வியக்க வைத்தவர்.

மேலும் சக எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்தவர்.

இன்னும் பல பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சித்ரா

 


2016 ஸ்பெஷல்ஸ்!!!!

ஜான்சி, சகி

Chillzeeக்கு ஸ்பெஷலாக இருந்த இரண்டு பேருக்கு இந்த ஸ்பெஷல் அவார்ட்!

ஜான்சி

ஜான்சி பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை.

கவிதை, கட்டுரை, சிறுகதை, குழந்தைகள் கதை, தொடர்கதை என எல்லா பரிமாணங்களிலும் ஜொலிக்கும் ஒரு தங்கத் தாரிகை!

அதிக அளவிலான திறமை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு அருமையான படைப்பாளர்.

மேலும் கருத்துக்கள் மூலம் மற்ற எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் வல்லவர்.

வாழ்த்துக்கள் ஜான்சி.

இன்னும் பல பல படைப்புகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

சகி

கி ஒரு பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர்.

காதல், குடும்பம், சரித்திரம், ஆக்ஷன், மர்மம், சமூக நலன், பெண்ணியம் என பல பல வித கதைகளை எழுதும் திறமை உள்ளவர்.

இன்னும் பல பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சகி!

 


Chillzee ஹால் ஆஃப் ஃபேம்!

பிந்து வினோத்

புதிதாக அறிமுகப் படுத்தி இருக்கும் ஹால் ஆஃப் ஃபேம் விருதிற்கு மிகவும் தகுதி ஆனவர் பிந்து.

Chillzeeக்கு முகவரி கொடுத்தவர்! இன்று கம்பீரமாக நிற்கும் நம் சைட்டிற்கு விதை போட உறுதுணையாக இருந்து, பேணி வளர்க்கவும் உதவியவர் [உதவிக் கொண்டிருப்பவர்].

புயலுக்கு பின் தொடங்கி இன்றைய என்றென்றும் உன்னுடன் வரை எல்லா கதைகளுமே அழகான படைப்புகள்.

வாழ்த்துக்கள் பிந்து!

 


 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.