(Reading time: 2 - 3 minutes)

குட்டிக் கதைகள் – 64. பழக்க வழக்கங்கள்

ரு ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அனைவரும் செல்லம் கொடுத்ததால் அந்த சிறுவனிடம் நிறைய கெட்டப் பழக்கங்கள் இருந்தது.

  

மகனின் பழக்க வழக்கங்கள் தந்தைக்கு கவலையைக் கொடுத்தது.

  

அதனால் அவர் வயதான அறிவாளி ஒருவரை சந்தித்து ஆலோசனைக் கேட்டார்.

  

பெரியவர் அந்த சிறுவனை தன்னிடம் அழைத்து வரச் சொன்னார்.

  

பணக்காரரும் சிறுவனை முதியவரிடம் அழைத்து வந்தார்.

  

தந்தையை அங்கே காத்திருக்க சொன்ன பெரியவர், சிறுவனை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

  

அந்த சிறுவனுக்கு ஒரு சிறிய மரக்கன்றைக் காட்டிய பெரியவர், அதை வெளியே இழுக்கச் சொன்னார். சிறுவன் எளிதாக கன்றை பிடுங்கி எடுத்தான்.

  

அடுத்து அந்த முதியவர் சிறுவனிடம் ஒரு சிறிய செடியை காண்பித்து இழுக்கச் சொன்னார். சிறுவனும் அதைக் கொஞ்சம் முயற்சியுடன் வெளியே எடுத்தான்.

  

அடுத்ததாக அந்த முதியவர் சிறுவனை ஒரு புதரை இழுக்கச் சொன்னார்.

  

அடுத்தது ஒரு சிறிய மரம். அதை பிடுங்கி வெளியே இழுக்க சிறுவன் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

  

இறுதியாக, முதியவர் ஒரு பெரிய மரத்தைக் காட்டி சிறுவனை வெளியே இழுக்கச் சொன்னார்.

  

சிறுவன் என்ன எல்லாமோ செய்துப் பார்த்தான். ஆனால் அவனால் மரத்தை பிடுங்க முடியவில்லை.

  

முதியவர் சிறுவனிடம், "நல்லதோ கெட்டதோ, பழக்க வழக்கங்களும் இப்படித் தான்" என்றார்.

  

கருத்து

  

கெட்ட பழக்கங்கள் நம் வாழ்வில் அங்கமாகி விட்டால் அவற்றை அகற்றுவது கடினம். எனவே ஆரம்பக் கட்டத்திலேயே அதை அகற்றுவது நல்லது, எளிதானதும் கூட!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.