(Reading time: 8 - 15 minutes)

  

எருதுச் சண்டையைப் பார்த்த போது, யானைச் சண்டை சாதாரணமாகி விட்டது.

  

சேவற் சண்டை கண்ணுக்கு விருந்தாயிருந்தது.

  

புலிச்சண்டை தான் எல்லாவற்றிலும் பயங்கரமாய் இருந்தது. சில விலங்குகள் பயந்து கண்ணை மூடிக் கொண்டன. சில அந்தத் திடலை விட்டு ஓடியே போய் விட்டன!

  

அடுத்து ஓட்டப் பந்தயம் தொடங்கியது. காளை மாடுகள் ஐநூறு முழ ஓட்டப்பந்தயம் ஓடின.

  

வேட்டை நாய்கள் ஆயிரமுழ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டன.

  

குதிரைகள் இரண்டு கல் பந்தயம் ஓடின. மான்கள் ஐந்து கல் பந்தயம் ஓடின.

  

கடைசியாக முயல்கள். அவை ஆறுகல் பந்தயம் ஓடத் தொடங்கின.

  

ஆமையோடு போட்டியிட்டுத் தோற்ற முயலின் கதையைக் கூறி அப்படி யாகிவிடக் கூடாது என்று எல்லா விலங்குகளும் பேசிக் கொண்டன.

  

முயல்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டன.

  

அதில் சிவபக்தி மிகுந்த முயல் ஒன்று இருந்தது. பந்தயத்துக்கு வரும் முன்னாலேயே காட்டுக்குளத்தின் கரையில் அரசமரத்தடியில் இருந்த சிவலிங்கத்திற்கு லிங்க பூசை செய்து விட்டு அது பந்தயத்திற்கு வந்திருந்தது.

  

"கடவுளே என் கால்களுக்கு விசையைக் கொடு. எல்லாருக்கும் முன்னால் நான் ஓடி வந்து முதல் பரிசு பெற எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.