(Reading time: 8 - 15 minutes)

வெளியாகக் காட்சி தந்தது. கூடியிருந்த விலங்குகள் கொரித்துச் தின்ற கடலைத் தோல்களும் பறித்துத் தின்ற வாழைப்பழத் தோல்களும் அங்கங்கே சிதறிக் கிடந்தன.

  

புலிகளும், எருதுகளும் நடத்திய போராட்டக் காட்சிகளில் வழிந்த குருதி திட்டுத் திட்டாய் உறைந்து திடந்தது.

  

இவற்றையெல்லாம் கண்ட அந்த வெள்ளை முயலுக்கு குழப்பமாய் இருந்தது . பந்தயம் முடிவதற்குள் இந்தக் காட்டு விலங்குகள் எல்லாம் எங்கே ஓடிவிட்டன. ஏன் ஓடி விட்டன. பரிசு கொடுக்க வேண்டிய அந்த யானையார் எங்கே என்றெல்லாம் அது நினைத்துக் குழம்பியது.

  

அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த குட்டி மான் ஒன்று அதன் அருகில் வந்தது. முயல் அண்ணா நேற்று நீ எங்கே போய் விட்டாய்? பந்தயத்தில் ஓடியதும் பரிசுவாங்காமல் எங்கே போனாய். யானையார் உனக்காக அரைமணி நேரம் காத்திருந்தார். எல்லாரும் கலைந்து போன பிறகும் கூட உனக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக தலைவர்கள் ஐந்தாறு பேர் உனக்காக காத்திருந்தார்கள். அண்ணா நீ எங்கே போய் வருகிறாய்.?

  

மான் குட்டியின் கேள்வி முயலை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

  

"நான் இன்னும் பந்தயத்தை முடிக்கவில்லையே இன்னும் பொழுது சாயவில்லையே; அதற்குள் நீங்கள் ஏன் கலைந்து போனீர்கள்?'' என்று கேட்டது வெள்ளை முயல் .

  

'முயல் அண்ணா, உனக்கென்ன பைத்தியமா? நேற்று ஒருநாள் தானே பந்தயம் வைத்திருந்தோம். பந்தயம் முடிந்து நேற்றே எல்லாருக்கும் பரிசு கொடுத்தாய் விட்டது. உனக்குக் கொடுக்க வேண்டிய தங்கக் கோப்பையை யானையார் தான் இருக்கும் இடத்திலுள்ள அரசமரப் பொந்தில் பத்திரமாக வைத்திருக்கி றார். வா போய்ப் பார்க்கலாம். பாவம் எல்லார் முன்னேயும் நீ பரிசு வாங்கினால் எவ்வளவு பெருமையாய் இருக்கும்'' என்று கூறி வெள்ளை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.