(Reading time: 8 - 15 minutes)

முயலை மான்குட்டி யானையாரிடம் அழைத்துச் சென்றது.

  

யானையார் "பரிசு வாங்கக் கூட இருக்காமல் எங்கே போனாய்?'' என்று கோபித்துக் கொண்டார். ஆனால் முயலின் ஓட்டத்தைப் பாராட்டினார். "கதிரவன் கூட உன் வேகத்திற்குத் தோற்றுப் போவான்' என்று யானையார் சொன்ன போதுதான் முயலுக்கு உண்மை புரிந்தது.

  

சிவபெருமான் வரங்கொடுத்தபடி அது கதிரவனின் வேகத்தில் பாய்ந்து சென்றதால், கதிரவனும் அந்த முயலும் ஒரே வேகத்தில் போயிருக்கின்றன. அதனால் தான் அது எப்போது திரும்பிப் பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு நேரேயே இருந்திருக்கிறான். பொழுதும் சாயாமல் இருளும் வராமல் இருபத்து நான்கு மணி நேரம் ஓடி இருந்த இடத்திற்கே திரும்பி வந்திருக்கிறது. அதற்குத் தெரியாமலே அந்தக் காட்டில் ஒரு நாள் ஓடிப்போய் இருக்கிறது.

  

தான் இல்லாவிட்டாலும் தனக்காகப் பரிசை வைத்திருந்த காட்டு விலங்குகளின் பெருந்தன்மையை எண்ணி அது மனம் பூரித்தது.

  

தன் பரிசான தங்கக் கோப்பையை எடுத்துக் கொண்டு காட்டுக் குளத்தின் கரையில் அரச மரத்தடியில் இருந்த சிவலிங்கப் பெருமானை வணங்கி நன்றி கூற அந்த முயல் சென்றது. அப்போது அங்கங்கே எதிர்ப்பட்ட வன விலங்குகளெல்லாம் அதைப் பார்த்துப் பாராட்டிப் புகழ்ந்தன.

  

வெள்ளை முயல் மிக்க மகிழ்ச்சியோடு தனக்கு வரங்கொடுத்த சிவபெருமானைச் சென்று வணங்கி நன்றி கூறித் திரும்பியது. அதன் உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

  

------------

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.