(Reading time: 8 - 15 minutes)

என்று பாடித் தொழுதது.

  

சிவபெருமான் அதன் கால்களுக்கு மிக விரைந்து செல்லும் ஆற்றலைக் கொடுத்தார். கதிரவன் செல்லும் வேகத்தில் நீ செல்லுவாய் என்று சிவலிங்கப் பெருமான் அந்த முயலுக்கு வரம் கொடுத்தார்.

  

முயல்கள் பந்தயத்தில் ஓடத் தொடங்கின. அந்தத் திடலில் அவை ஓடிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அம்பு போலப் பாய்வதும், சக்கரம் போல் சுழித்துத் தாவுவதும் பார்க்கப் பார்க்க வியப்புத் தோன்றியது. சிவபக்தி மிகுந்த அந்த முயல் ஓடத் தொடங்கியபோது மற்ற முயல்களைக் காட்டிலும் மிக வேகமாகத் துள்ளிப் பாய்ந்து ஓடியது.

  

ஒரே பாய்ச்சலில் அது ஓடிக்கொண்டே இருந்தது. பந்தயம் நடக்கும் இடத்தைத் தாண்டி காட்டைத் தாண்டி, ஊரைத்தாண்டி, கடலைத்தாண்டி அப்படி துள்ளித் துள்ளித் ஓடிக் கொண்டிருந்தது.

  

அது எந்த நேரம் தலை நிமிர்ந்து பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு மேலேயே காட்சி தந்தான். அது எவ்வளவு நேரம் ஓடியும் பொழுது சாயவே இல்லை .

  

பொழுது சாய்வதற்குள் உலகத்தைச் சுற்றி வந்து விடவேண்டும் என்று அது திட்ட மிட்டது. ஆனால் அது எவ்வளவு நேரம் ஓடியும் பொழுது சாயவே இல்லை .

  

சிவபெருமான் கதிரவனைப் போல் அந்த முயலும் விரைந்து செல்ல அருள் புரிந்ததால் அது எப்பொழுது பார்த்தாலும் தலைக்கு மேல் இருக்கும் கதிரவனே தோன்றியது.

  

சரியாக இருபத்து நான்கு மணி நேரம் மேற்கு நோக்கியே சென்ற முயல் தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப்பொழுது பந்தயம் நடந்த இடத்தில் யாரும் இல்லை. அந்த வெட்டவெளியானது வெறும் மொட்டை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.