(Reading time: 9 - 17 minutes)

  

"பாவம்! யானையாரை இப்போது யார் காப்பாற்றுவார்கள்!'' என்று கேட்டது இரங்கூன் முயல்.

  

அப்போது ஏதோ புதுவிதமான ஒலி கேட்டது இரண்டு முயல் குட்டிகளும் திடுக்கிட்டுத் திரும்பின.

  

இரண்டு சரக்குப் பேருந்துகளும் ஒரு சிறிய உந்தும் அந்தக் காட்டுக்குள் வந்து நின்றன. அவற்றிலிருந்து பதினைந்து மனிதர்கள் இறங்கினார்கள்.

  

அவர்களில் ஒருவன் யானை பள்ளத்தில் விழுந்து தத்தளிப்பதைப் பார்த்து விட்டான்.

  

"தலைவரே, யானை பிடிக்க வந்தோம். இதோ பிடிபட்டே யானை கிடைத்திருக்கிறது'' என்றான்.

  

"நம் வேலை எளிதாகி விட்டது' என்று கூறிக் கொண்டே தலைவர் யானையை நோக்கி நடந்தார்.

  

பிறகு அவருடைய கட்டளைப்படி சில ஆட்கள் யானையைக் கயிற்றால் கட்டினார்கள். சரக்குப் பேருந்து ஒன்றின் மீது இருந்த சுழல் தூக்கியால் யானையை அப்படியே மேலே தூக்கினார்கள். சுழல் தூக்கியை இயக்கினார்கள். அது அப்படியே யானையைத் தூக்கி மற்றொரு பேருந்தின் மீது வைத்து விட்டது.

  

யானை அசையாதபடி பேருந்துடன் சேர்த்துப் பல கயிறுகளைக் கொண்டு கட்டினார்கள். பிறகு அவர்கள் வேறு யானைகள் ஏதாவது அகப்படுமா என்று காட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.

  

யானை பள்ளத்தில் விழுந்ததிலிருந்து இரங்கூன் முயலுக்குத் துன்பமாய்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.