(Reading time: 9 - 17 minutes)

வைத்தன. அந்தக் கரும்புக் குவியலிலிருந்து பள்ளத்தின் குறுக்காக , வரிசையாகக் கரும்பைப் போட்டன. பள்ளம் இருந்த இடத்திலிருந்து பத்து அடிக்கு ஒரு கரும்பாக, யானை இருக்கும் இடம் வரையில் போட்டுக் கொண்டே சென்றன.

  

யானை பார்க்கு முன் புதர் மறைவில் மறைந்து கொண்டன.

  

காட்டில் உலாவிக் கொண்டிருந்த யானையின் கண்ணில் தரையில் கிடந்த கரும்பு தெரிந்தது. உடனே அது ஓடி வந்து அதை எடுத்தது. துதிக்கையால் வளைத்து அப்படியே வாய்க்குள் செலுத்தியது. கடித்துக் கடித்துத் தின்றது.

  

சற்று தள்ளிக் கிடந்த கரும்பைப் பார்த்தது. ஓடி வந்து இழுத்துக் கடித்துத் தின்றது.

  

இன்னும் சற்று தொலைவில் கிடந்த கரும்பை இழுத்துக் கடித்தது.

  

இப்படியாக ஒவ்வொரு கரும்பாகத் தின்று கொண்டே, பள்ளத்தின் அருகில் வந்து விட்டது. பள் ளத்தின் எதிரில் குவியலாகக் கிடந்த கரும்புகளைப் பார்த்தவுடன் யானை விரைவாக நடந்தது. அப்படி நடந்து செல்லும் போது, பள்ளத்தின் வழியாகச் சென் றது. பள்ளத்தின் குறுக்காகப் பரப்பியிருந்த கரும்பு களின் மேல் அது காலடி யெடுத்து வைத்தவுடன், யானையின் பளுவைத் தாங்காமல், கரும்புகள் ஓடிந்து யானை பள்ளத்திற்குள் விழுந்து விட்டது.

  

பள்ளம் ஒடுக்கமாகவும் ஆழமாகவும் இருந்ததால், அந்தக் காட்டு யானையால் அசையவோ , நகரவோ, மேலேறவோ முடியவில்லை.

  

விழுந்த அதிர்ச்சியில் அது பிளிறிய பிளிறல் காடெங்கும் எதிரொலித்தது.

  

"எங்களைத் தூக்கி எறிந்து துன்பப் படுத்தினாயே, இப்போது எப்படியிருக்கிறது'' என்று கேட்டுக் கொண்டே ஷான் நாட்டு முயல் வெளியே வந்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.