(Reading time: 5 - 9 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

  

அரசர் ராமுவின் எஜமானனை அழைத்து வைரம் பற்றிக் கேட்டார்.

  

அரசே, நான் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்பவன். கோவிலில் வைரங்களைக் கண்டறிந்தபோது, ​​அவற்றை ராமுவிடம் கொடுத்து, அரசக் கருவூலத்தில் சேர்க்க சொன்னேன். ஆனால் அவன் செய்வதற்குப் பதிலாக, உங்களிடம் பொய் புகார் செய்திருக்கிறான். அவன் அரசக் கருவூலத்தில் வைரங்களை சேர்க்கவில்லை என்றால், அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும்.

  

ராமுவின் எஜமானன் தனது வேலைக்காரர்களை சாட்சிகளாக கொண்டு வந்து நிறுத்தினார்.

  

மூன்று சாட்சிகளும், “எங்கள் எஜமானர் எங்கள் முன்னிலையில் ராமுவுக்கு வைரங்களை கொடுத்தார்.” என்றார்கள்.

  

 ராமு கோபமடைந்தான்.

  

அரசே இது உண்மை இல்லை! எனக் கூவினான்.

  

அரசர் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் காத்திருக்கும்படி கூறினார். பின்னர் தன் அமைச்சரையும் தெனாலிராமனையும் அழைத்து அவர்களுடன் தனது ஓய்வு அறைக்குச் சென்றார்.

  

“சொல்லுங்கள் அமைச்சரே, வைரங்கள் யாரிடம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ராமுவிடமா? அல்லது அவனது எஜமானனிடமா? “

  

“அரசே, நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் நடந்தது என்ன என்று தெரியாது. ஆனால் எஜமானருக்கு மூன்று சாட்சிகள் இருக்கிறார்கள், ராமு சொல்வதற்கு ஒரு சாட்சியும் இல்லை.”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.