(Reading time: 11 - 21 minutes)

  

யாரும் காணப்படவில்லை.

  

மறுபடியும் சிட்டு ’அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டது.

  

தலைமையாசிரியை எதிரில் பார்த்தாள்.

  

அம்மா அம்மா, நான் தான் சிட்டுக் குருவி” என்று கூறிப் படபட வென்று இறக்கையை அடித்துக் கொண்டது அம்மாச் சிட்டு.

  

தலைமை யாசிரியை குனிந்து சிட்டைப் பார்த்தாள். ”அம்மா வணக்கம்” என்று கூறிக் கொண்டே சிட்டுக் குருவி அவள் காலில் வந்து விழுந்தது.

  

இந்தச் சிட்டு எதற்கு நம்மை வணங்குகிறது? என்று நினைத்தாள் தலைமை ஆசிரியை.

  

, சிட்டுக்குருவி, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள் தலைமை ஆசிரியை.

  

அம்மா, நீங்கள் என்மீது கருணை வைக்க வேண்டும். என் குஞ்சுகள் இரண்டை யும் தங்கள் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து தாங்கள் இதை மறுக்கக் கூடாது” என்று அம்மாச்சிட்டு கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

  

தலைமை ஆசிரியைக்கு, அந்தச் சிட்டு மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால், அந்தச் சிட்டு, கேட்டுக் கொண்டபடி அதன் குஞ்சுகளைத் தன் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டாள்.

  

பள்ளிக்கூடச் சம்பளமும், நன்கொடையும் கேட்கவில்லை.

  

நாளைக் காலை ஒன்பது மணிக்கு உன் குஞ்சுகள் இ ர ண்டையும் கூட்டிக் கொண்டுவா. மழலையர் வகுப்பில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறேன். ஒழுங்காகப் பாடம் படித்தால் தொடர்ந்து படிக்கலாம். இல்லா விட்டால், பள்ளியிலிருந்து நீக்கி விடுவேன். எச்சரிக்கை” என்று

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.