(Reading time: 11 - 21 minutes)

  

"அண்ணே அண்ணே! தையற்கார அண்ணே, என் சிட்டுக் குஞ்சுகள் இரண்டும் நாளைக்குப் பள்ளிக் கூடத்திற்குப் போகின் றன. இரண்டு குஞ்சுகளுக்கும், இரண்டு சீருடைகள் தைத்துக் கொடுங்கள் அண்ணே” என்று கேட்டது.

  

தையற்காரரும் அதற்கு உடனே இரண்டு சீருடைகள் தைத்துக் கொடுத்தார். மறுநாள் காலைஇரண்டுசிட்டுக் குருவிகளும் அழகான அந்தச் சீருடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டன.

  

ஒருடையோடு அவை தத்தித் தத்தி நடந்து சென்ற காட்சி அழகைக் கண்டு அரச மரத்துப் பறவைகளெல்லாம் மகிழ்ச்சி கொண்டன.

  

எல்லாப் பறவைகளின் வாழ்த்துக்களோடு அவை பள்ளிக் கூடத்திற்குப்போய்ச் சேர்ந்தன.

  

மழலையர் வகுப்பில் அவற்றை உட்கார வைத்து விட்டு, அம்மாச் சிட்டு அரசமரத்திற்குத் திரும்பியது. பிறகு இரை தேடச் சென்று தன் குஞ்சுகளுக்குப் பள்ளிக் கூடத்தில் பகல் உணவு கொண்டு போய்க் கொடுத்தது.

  

மாலை நான்கு மணிக்கு மீண்டும் சென்று கூட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தது

  

வகுப்பில் இருந்த பிள்ளைகளுக்கு இந்த சிட்டுக்குருவிகள் படிக்க வந்ததிலிருந்தே ஒரே கொண்டாட்டம். ஆசிரியை, வராதநேரங்களில் இந்தக் குருவிகளோடு எல்லாக் குழந்தைகளும் விளையாடின.

  

வர, வரப் பிள்ளைகளின் கவனம் பாடத்தில் செல்லாமல், சிட்டுக் குருவிகளோடு விளையாடுவதிலேயே காலம் சென்றது. இதனால் அந்த மாதத் தேர்வில் எல்லாப் பிள்ளைகளுக்கும் மதிப்பெண் குறைந்து விட்டது.

  

தலைமை ஆசிரியை வகுப்பறைக்கு வந்து அந்த வகுப்பு ஆசிரியையைக் கோபித்துக் கொண்டாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.