(Reading time: 8 - 15 minutes)

களிமண் உருண்டைகளை யடித்தனர். சிலர் வில்லை வளைத்து அம்பெய்தனர். இதில் சில சிட்டுக் குருவிகள் அடிபட்டு விழுந்து இறந்தன.

  

இந்த வேட்டை நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு சிட்டுக் குருவி வான வெளியில் பறந்து சென்றது. நேரே கொல்லி மலைக்குச் சென்றது. அங்கு ஒர் அரச மரத்தில் வீற்றிருந்த சிட்டுக் குருவியரசனிடம் நடந்த நிகழ்ச்சி களைக் கூறியது. உடனே அந்த சிட்டுக் குருவி அரசன் படை திரட்டிக் கொண்டு பாராண்டபுரத்திற்குப் பறந்து சென்றது. பாராண்டபுரத்து அரண்மனையைச் சுற்றிலும் சிட்டுக் குருவிகளின் படையெடுப்பு.

  

அரண்மனை வேலைக் காரர்களால் வேலை செய்ய முடிய வில்லை. தோட்ட வேலை செய்பவன் முகத்தில் நான்கு சிட்டுக் குருவிகள் மோதின.

  

அவன் கோபத்தோடு கல்லெடுக்கக் கையை நீட்டும்போது கையில் நான்கு சிட்டுக் குருவிகள் கொத்தின. அவன் நிமிரும் போது கன்னத்தில் கொத்தின. குனியும்போது தலையில் கொத்தின.

  

இப்படி ஒவ்வொரு அரண்மனை வேலைக்காரரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குருவிகள் சூழ்ந்து கொண்டு தொல்லை கொடுத்தன.

  

தோட்டக்காரர்கள் செடிகளுக்கு நீர் ஊற்ற முடியவில்லை. சேடிகள் பூப்பறிக்க முடியவில்லை. சமையல்காரர்கள் அடுக்களையில் வேலை செய்ய முடியவில்லை. காவல் வீரர்கள் பாராக் கொடுக்க முடியவில்லை.

  

அமைச்சர்கள் அரண்மனைக்குள் நுழையவே முடியவில்லை. அரண்மனை முழுவதும் ஒரே கூச்சலும் கூக்குரலும் அழுகுரலும் நிறைந்தன. அரண் மனையைச் சுற்றிலும் சிட்டுக் குருவிகளின் ஆங்காரமான போர்க்குரல்.

  

பாராண்டபுரத்து மன்னர், இந்த நிலையைப் பற்றிக் கேட்டவுடன், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக உப்பரிகைக்கு வந்தார்.

  

உப்பரிகைத் தளத்தில் அரசர் வரவை எதிர் பார்த்துக் கொண்டு ஆயிரம் சிட்டுக் குருவிகள் காத்திருந்தன.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.