(Reading time: 8 - 15 minutes)

தான் இறைவன் இந்த உலகில் எல்லாரையும் படைத்திருக்கிறான். எல்லாரும் வாழப் பிறந்தவர்களே? இதில் ஐயமேயில்லை என் றார் மன்னர்.

  

'மன்னர் பெருமானே, தாங்கள் தங்கள் மகள் விளையாடுவதற்காக ஒரு சோலை உருவாக்கினர்களாம். அதில் வாழும் எங்கள் சிட்டுக் குருவிகளை விரட்டியடிக்கச் சொன்னீர்களாம். உங்கள் மகள் விளையாடும் சோலையில் எங்கள் குருவிக் குஞ்சுகள் விளையாடக் கூடாதென்று சொன்னிர்களாம். உங்கள் ஆட்கள் எங்கள் கூடுகளையெல்லாம் கலைத்து விட்டார்களாம். இதற்கு நீதி கேட்கவே நாங்கள் இங்கு கூடி வந்துள்ளோம் என்று சிட்டரசன் கூறியது.

  

பாராண்டபுரத்து மன்னர் ஊமையானார். சிறிது நேரம் கழித்து அவர் சிட்டரசனைப் பார்த்து,

  

நான் நீதி தவறி விட்டேன். மன்னன் என்ற ஆங்காரத்தால் மனந்தெளியாமல் இந்தக் கட்டளையைப் பிறப்பித்துவிட்டேன்.

  

"சிட்டரசனே, இனிமேல் நான் மட்டும் அல்ல, என் ஆட்சியில் உள்ள யாரும் இவ்வாறு நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறேன். இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒரு மாதிரிதான் என்ற உண்மையை நான் மறக்க மாட்டேன். நீயும், உன் குருவிக் குலமும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என் அன்பின் அடையாளமாக, இன்று அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள தானியங்களை உங்களுக்கு வாரி வழங்க விரும்புகிறேன். எல்லோரும் விருந்துண்டு மகிழ்ச்சியாக உங்கள் கூடுகளுக்குத் திரும்ப வேண்டுகிறேன்!” என்றார்.

  

உடனே எல்லாச் சிட்டுகளும் பாராண்ட புரமன்னர் வாழ்க!” என்று கத்தின.

  

தானிய விருந்து உண்ட பின் தத்தம் கூடுகளுக்கு மகிழ்ச்சியோடுபறந்து சென்றன. சிட்டரசனும் தன் பூம்பல்லக்கில் ஏறிக்கொல்லி மலைக்குத் திரும்பியது.

  

------------

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.