(Reading time: 8 - 15 minutes)

  

மன்னர் தலையைக் கண்டவுடன் ஒரேயடியாக அவர் மீது பாயத் துடித்துக் கொண்டு நின்றன.

  

ஆனால் மன்னர் முன்னேற்பாடாக இரும்புக் கவசம் அணிந்து வந்தார். முகத்துக்கு நேரே கண்ணாடி அமைந்த தலைக் கவசத்துடன் அவர் வெளியே வந்தார்.

  

உப்பரிகையின் மேலிருந்து அரண்மனை யின் முன்புறத்தை நோக்கினார். எங்கு பார்த்தாலும் சிட்டுக்குருவிகள். இலட்சக்கணக்கான சிட்டுக் குருவிகள்.

  

அரசர் அந்தச் சிட்டுக் குருவிகளின் கூட் டத்தை நோக்கிப் பேசினார்.

  

"சிட்டுக் குருவிகளே, நீங்கள் ஏன் இப்படிக்கூட்டமாகப் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன குறை? தண்ணீர் கிடைக்கவில்லையா? தானியம் கிடைக்க வில்லையா? ஏன் இப்படிக் கூட்டமாக வந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று பாராண்டபுர மன்னர் கேட்டார்.

  

எங்கள் தலைவன் வருகிறார் சிட்டரசன் வருகிறார்! உங்களுக்கு அவர் பதில் சொல்லுவார்' என்று ஐந்தாறு சிட்டுக் குருவிகள் கத்தின. அப்போது தொலைவில் வானவெளி யில் ஒரு பூம்பல்லக்கு மிதந்து வருதது தெரிந்தது.

  

பாராண்டபுர மன்னர் நிமிர்ந்து பார்த்தார்.

  

கொடிகளால் பின்னிய ஒரு பூம்பல்லக்கு வானில் மிதந்து வருவதுபோல் தோன்றியது. உண்மையில் அது வானில் தானாக மிதந்து வரவில்லை. ஐம்பது சிட்டுக் குருவிகள் தங்கள் அலகுகளால் பற்றிக் கொண்டு ஒரே சீராகப் பறந்து வந்தன.

  

சாமந்திப் பூக்களால் ஆகிய அந்த மஞ்சள் பல்லக்கில் ரோஜாப் பூவினால் ஒரு உயர்ந்த பீடம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பீடத்தின் மீது மிகுந்த பெருமிதத்தோடு ஒரு சிட்டுக் குருவி உட்கார்ந்திருந்தது. அதன் சிறிய கண்களின் கூரிய பார்வையால், அது உலகத்தையே அடக்கியாளக் கூடிய தோற்றத்தைப் பெற்றிருந்தது. இலட்சக் கணக்கான சிட்டுக்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.