(Reading time: 11 - 22 minutes)

ழுதவாறே ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டாள் தனம்.மாலை இருட்ட ஆரம்பித்தது.

மணி ஆறு இருக்கும் என்று எண்ணிய தனம் எதேச்சயாக குறட்டை விட்டுத் தூங்கும் அவனைப்

பார்த்தாள்.பார்த்தவள் நெஞ்சில் கைவைத்துக் கத்த ஆரம்பித்தாள்.உடம்பெல்லாம் நடுங்கியது.

பயத்தில் மயக்கம் வருவதுபோல் இருந்தது அந்தக் காட்சியைப் பார்த்து.ஆம் அந்த காட்டு மனிதன் படுத்திருந்த இடத்தில் இப்போது அந்த மனிதன் இல்லை ஒரு பயங்கரமான கரடி ஒன்று படுத்துக்

கிடந்தது.பயங்கரமாய் குறட்டைவிட்டு ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது.ஐயோ ஐயோ என்று கத்தியபடி இங்கும் அங்கும் ஓடினாள் தனம்.

இவள் கத்திய கத்தலில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தது அந்த கரடி.அவளைப் பார்த்து கோபமாய் உறுமியது.ஆம் மனிதனாய் இருந்தபோது மனிதனைப்போல் பேசிய மனிதன் கரடியாய் மாறியவுடன் பேச்சிழந்து கரடிபோல் உறுமினான்.சட்டென எழுந்து நின்றது அந்தக்கரடி.

உறுமியபடியே தனத்தின் அருகில் வந்தது.கோபமாய்க் கத்தியபடியே ஏதொ சொல்லியது.பயத்தில்

வாயடைத்துப்போய் நின்றிருந்த தனத்துக்கு அது என்ன சொல்லியது என்று புரியவில்லை.கரடியின் பாஷை மனிதனுக்கு எப்படிப் புரியும்?அது சொன்னதெல்லாம் இதுதான்.அதாவது தான் மனிதனாக

இருந்தபோது தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவருக்கு இடைஞ்சல் செய்ததாகவும் அதனால்

கோபம் கொண்ட அந்த முனிவர் தன்னைப் பகல் முழுதும் மனிதனாகவும் மாலை வந்தவுடன் கரடியாகமாறி மறுனாள் காலை விடிந்தவுடன் மீண்டும் மனிதனாக மாறவேண்டும் என சாபமிட்டதாகவும் அந்த சாபத்தின் பலனாக இப்போது மாலை நேரம் வந்து விட்டதால் கரடியாக மாறிவிட்டதாகவும் சொல்லியது.

தனத்தின் உடல் தாறு மாறாக நடுங்கிக் கொண்டிருந்தது.பயத்தில் மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது.கரடி வெளியே கிளம்பியது.நினைவாக கதவைப் பூட்டிக்கொண்டு சென்றது.அது கரடியாய்

மாறியபிறகு மிருக குணதிற்கேற்ப இரவில் இரை தேடப் போகும் காட்டிற்குள்.நிறைய மிருகங்களைக் கொன்று வீடுக்கு எடுத்துவரும்.மறுனாள் மனிதனாக மாறிய பிறகு அவற்றைச் சமைத்துச் சாப்பிடும்.இப்போதும் அதற்காகத்தான் வெளியே சென்றது.

தனம் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.தன் பாட்டி அடிக்கடி தன்னிடம் சொல்லும் அறிவுறைகள் அவ்ளுக்கு நினைவுக்கு வந்தன. சின்ன புள்ளையா இருந்தபோது தனம் எல்லாத்துக்கும் பயப்படுவா..அப்பெல்லாம் அவ பாட்டி ஏய்..தனங்குட்டி..எல்லாத்துக்கும் பயப்படக் கூடாது.பொண்ணாப் பொறந்தவ தைரியமா இருக்கணும்..எதுக்கு அஞ்சனுமோ அதுக்குதான் அஞ்சணும்..மனசுல துணிச்சல வளத்துக்கணும்..எல்லாத்துக்கும் அழக்கூடாது...ஒரு பொண்ணுக்கு

தைரியமும் தன்னம்பிக்கையும்தான் அவசியம்..மொதெல்ல இது ரெண்டையும்தான் நம்பணும அப்பரம்தான் மத்ததெல்லாம்..ஒரு இக்கட்டான சூழ்னெலம வந்தா பயந்து அழக்கூடாது..அதுலேந்து

எப்படி வெளிவரலாம்,எப்பிடி தப்பிக்கலாம்ன்னு அறிவுபூர்வமா யோசிக்கணும் தொட்டத்துக் கெல்லாம் அழுதுக்கிட்டு நிக்கக் கூடாதுன்னு சொன்னது நினைவுக்கு வந்தது..தைரியம் ஆனாள் தனம்...நிதானமாக யோசித்தாள்.திட்டம் ஒன்று அவள் மனதில் தோணிச்சு.

முதலில் வாசல் கதவை உட்புறமாகத் தாப்பா போட்டா.கொல்லைப்புறக் கதவையும் உட்புறமாகத்

தாப்பா போட்டா.பாத்திரங்கள் இருக்குமிடத்திற்குப் போனாள்.அங்க கரடி இறங்கி நின்றால் அதன் தலைகூட வெளியே தெரியாத அளவுக்கான பெ..ரீ....ரீ...ரீ....ரீ....ரீ.....ய வாய் அகலமான பாத்திரம் ஒன்று இருந்தது.சாதரணமாய் ஐந்தாறு ஆண்களாள் கூட அந்த பாத்திரத்தை தூக்க முடியாது.

ஆனாலும் ..தனம்..பொம்பளைக்கு ஒடம்புல பலம் இல்லாடியும் ஆம்பளங்களவிட மனசுல

பலமும் உறுதியும் அதிகம்..தேவையான நேரத்துல மன உறுதியோட செயல் படனும்னு பாட்டி

சொன்னது நினைவுக்கு வர மனதில் ஒரு உறுதியோடு அந்த பெரிய பாத்திரத்தைத் தரையோடு தரையாக இழுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போனாள்.அதே மன உறுதியோடு அதை அடுப்பின் மீது

ஏற்றிவைத்தாள்.குடம் குடமாய் வைக்கப்பட்டிருந்த எண்ணையை அந்த பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு ஊற்றினாள்.அடுப்பைப் பற்ற வைத்தாள்.நேரம் ஆக ஆக எண்ணை கொதிக்க

ஆரம்பித்தது.தளைக்க ஆரம்பித்தது.பின்னர் தனம் வேறு ஒரு அடுப்பை மூட்டி சின்ன இரும்புச் சட்டி ஒன்றை வைத்தாள்.காத்திருந்தாள் கரடியின் வருகைக்காக.

கரடி சில மிருகங்களின் செத்த உடலோடு வீட்டுக்கு வந்தது.வாசல் கதவை சாவிகொண்டு திறந்தது.

கதவை உள்ளே தள்ளி திறக்கப் பார்த்தது.தனம் உள்பக்கம் தாப்பா போட்டிருந்ததால் கதவ

திறக்க முடில.கதவைத் தட்டியது.சத்தம் போட்டது.தனம் திறக்கவில்லை.கரடிக்குக் கோவம் வந்தது.

கரடி வந்து கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் தனம் சூடேறிக்கொண்டிருந்த சின்ன இரும்புச் சட்டியில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்தாள்.காய்ந்த சட்டியில் தண்ணீர் பட்டதும் சொய்ங் என்று

சப்தம் எழுந்தது. நிமிடத்திற்கு ஒருமுறை இப்படி சப்தம் வருமாறு செய்தாள்.கரடி கதவில் காதை

வைத்துக் கேட்டது.சொய்ங்..சொய்ங்..என்ற சப்த்தத்தைக் கேட்டவுடன் அதற்கு மகா கோபம் வந்தது.

தனம் சுடச் சுட ஆப்பம் சுட்டுத்தின்பதாக நினைத்தது.தனக்குத் தெரியாமல் அவள் இப்படிச் செய்வதாக நினைத்தது.கோபம் தலைக்கேறியது.கொல்லைபுரம் வந்து கொல்லைக்கதவை சாவிகொண்டு திறந்தது.கதவைத் தள்ளிப்பார்த்தது.உள்ளே தனம் தாப்பா போட்டிருந்ததால் கதவை

திறக்க முடில.கதவில் காதை வைத்துக்கேட்டது.அதே சொய்ங்..சொய்ங் சத்தம்.கோபத்தின் உச்சிக்கே போனது கரடி..கோபம் மூளையை மழுங்க அடிக்கும் அல்லவா?சட்டென வீட்டின் கூறை

மீது ஏறியது(.கோபக்காரனுக்கு புத்தி மட்டு எனும் பெரியவர்கள் வார்த்தைக்கு ஏற்றவாறு மனிதனுக்கே புத்தி மட்டு என்றால் மிருகமான கரடிக்கு புத்தி எப்படி வேலை செய்யும்)கூறை மீது

ஏறிய கரடி சுடு சுடு ஆப்பம் சுட்டுத் திங்கிறியா..இரு இரு வரேன் வரேன் பொறு பொறு...

என்று கூறையை பிரித்துக்கொண்டு கோபத்தோடு கத்திக்கொண்டு கீழே குதித்தது.அது எங்கே

குதித்தது தெரியுமா?கொதித்தபடி தளைத்துக்கொண்டிருக்கும் எண்ணை பாத்திரத்தில் குதித்தது.

(கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணைப் பாத்திரம் அங்கே இருப்பது அதற்குத் தெரியாதல்லவா?)

இப்படித்தான் நடக்கும் என்பதை தனம் முன்னமே அறிந்திருந்ததால் கரடி எண்ணைப் பாத்திரத்தில்

குதிக்கும் போது கொதிக்கும் எண்ணை நாலாபுரமும் தெறிக்கும் என்பதால் தூரத்தில் போய் நின்றுகொண்டிருந்தாள்.கொதிக்கும் எண்ணைப் பாத்திரத்தில் விழுந்த அடுத்த நொடி கரடியின்

வாயிலிருந்து "ஓ" என்ற மரண ஓலமும்..தொடர்ந்து 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ரென்று அதன் உடல்

பொரியும் சப்தமும் கேட்டது.

தனம் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள்.கரடியின் பொரிந்த உடல் கொதிக்கும் எண்ணையில்

மிதப்பதை பார்த்தாள்.நிம்மதியாக மூச்சு விட்டாள்.தனக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த பாட்டிக்கு

மனதால் நன்றி சொன்னாள்.

காலைப் பொழுது விடிய ஆரம்பித்தது.கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த தனம் தன்

வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தன் அண்ணனைக் காணப்போகும் சந்தோஷத்தோடு.

என்னோட நீலக்கொக்கு கதையப் படிச்ச உங்க எல்லாருக்கும் என்னோட thanks..thanks ..thanks..

இந்த கதை நல்லாருக்கா?..hi..friends......நம்ம பாட்டி சொல்ரத நாம கேக்கணும் தனம் அக்கா அவங்க பாட்டி சொன்னத கேட்டதாலதானே  கரடிட்டேந்து தப்பிச்சாங்க?கரெக்ட்தானே?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.