(Reading time: 13 - 25 minutes)

ஐயோ..பேய்..பேய்.. - பூஜா

ரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இருந்தாங்க.அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான்.அந்த அம்மா இருக்காங்கள்ள அவங்க ரொம்ப பொல்லாதவங்க.எவ்வளவு பொல்லாதவங்கன்னா ரெண்டு கையையையும் சைடுல நீட்டினா வர அளவுக்குப் பொல்லாதவங்க.தெருவுல அவங்கள ராட்சஸீன்னுசொல்லுவாங்க.அவங்க காதுபட சொல்லமாட்டாங்க..அப்பிடி நேரக்க சொல்லிட்டா அவ்வளவுதான்.யாருக்கும் அவங்கள புடிக்காது.அவங்க புருஷன் இவங்ககிட்ட மாட்டிட்டு முழிச்சாரு பாவம்.அந்த பொல்லாத பொம்பளயோட புள்ள இருக்கானே அவ ரொம்ப புளி மக்கு.ஒண்ணா நம்பர்  புளிமக்கு.சுத்த சோம்பேறி.ஒரு வேலையும் செய்யத்தெரியாது.ஸ்கூலுக்கும் போகல.யாராவது ஏதாவது கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியாம ங்கே ன்னு நிப்பான்.நன்னா மூக்குப்பிடிக்க மூணு வேளை சாப்டுட்டு கொர் கொர்ன்னு தூங்குவான்.அம்மா எது சொன்னாலும் தலய தலய ஆட்டுவான்.ஒரு நாளைக்கு திடீருன்னு அந்த அப்பா செத்துப்பொயிட்டாரு.அந்த பொல்லாத பொம்பள அதப்பத்தி கவலப் படல.

இந்த மக்குப் பையனுக்கு கல்யாணம்பண்ற வயசாயிடுத்து.அவனோட பொல்லாத அம்மா அவனுக்குப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க..அந்த ஊர்ல எல்லாருக்கும் அம்மாவப் பத்தியும் புள்ளயப் பத்தியும் நன்னா தெரியும்கிறதுனால யாரும் பொண்ணு கொடுக்க முன் வரல.சரி என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சா அம்மாக்காரி.பக்கத்து ஊர்ல போய் விசாரிச்சா பொண்ணு கெடைக்குமான்னு பாக்கப் போனா.

அன்னக்கிளி ரொம்ப அழகான பொண்ணு.வயசு பதினெட்டுதான் ஆச்சு.ரொம்ப புத்திசாலி.எல்லார்ட்டையும் ரொம்ப அன்பா பண்பா பழகுவா.எல்லாருக்கும் அவள புடிக்கும்.ஆனா அவ அஞ்சாவதுதான் படிச்கிருக்கா.அவளுக்கு நிறைய படிக்க ஆசை.ஆனா அவ ரொம்ப பாவம்.ஏன்னா அவளுக்கு அம்மா கெடையாது. அவுளுக்கு பத்து வயசா இருக்கறச்சே அவ அம்மா சாமிட்ட போய்ட்டாங்க.அவ அப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டி அதான் சித்திக்காரி அன்னக்கிளிய ஸ்கூலுக்கு அனுப்பாம வீட்டு வேல செய்யச் சொல்லிட்டாங்க.ரொம்ப கொடும படுத்தினாங்க.பாவம் அன்னக்கிளி.அம்மாவ நெனைச்சு அடிக்கடி அழுவா.அன்னக்கிளி இருந்த ஊருக்குதான் மக்குப் பிள்ளையோட பொல்லாத அம்மாக்காரி பொண்ணு தேடி வந்தா.விதின்னு சொல்லுவாங்களே அது யாரையும் விடாதாமே?

Peiஅந்த விதி அன்னக்கிளியையும் விடல.அந்த பொல்லாத அம்மாக்காரி அன்னக்கிளியோட சித்தியப் பாத்து என்னோட பிள்ளைக்கு ஒன்னோட மூத்தா பொண்ணு அன்னக்கிளியக் கல்யாணம் பண்ணிக் குடுத்தா நிறைய பணம் தருவேன் அப்பிடின்னு சொல்ல பணம்ன்னு சொன்னதும் ஆ ன்னு வாயப் பொளந்துண்டு சரின்னு சொல்லிடறா.அன்னக்கிளியோட அப்பா ஒரு வாயில்லாப்பூச்சி.

பாவம் அன்னக்கிளிக்கு அந்த அசட்டுப் புள்ளையோட கல்யாணம் ஆயிடுது.கொடும கொடுமன்னு ஒத்தி கோயிலுக்குப் போனாளாம் அங்கொரு கொடும சலங்க கட்டிக்கிட்டு ஜிங்க் ஜாங்க்குன்னு ஆடிச்சாம்ன்னு என்னோட பாட்டி சொல்லுவாங்க. அதுமாதிரி சித்திக்காரி கொடுமேலேந்து பாவம் அன்னக்கிளி மாமியார் கொடுமையில வந்து மாட்டிக்கிட்டா.

சின்ன பொண்ணு அன்னக்கிளிகிட்ட அவ மாமியார் ரொம்ப பொல்லாதவளா நடந்து கிட்டா.ரொம்ப கொடும படுத்துனா.கடுமயா வேல வாங்குவா.எப்பிடி வேலை செஞ்சாலும் குத்தம் குறை கண்டுபிடிப்பா.அன்னக்கிளி மருமகதானே நம்ம பொண்ணுமாரிதானேன்னு நெனைக்கமட்டா.காலை நாலு மணிக்கு எழுந்தா ராத்திரி பதினோரு மணிவரை வேல வாங்குவா மாமியார்க்காரி.சரி வேலதான் வாங்கறாங்களே வயிறு நிறைய சாப்பாடு போடுவாங்களா அதுவும் கிடையாது.அரை வயத்துக்குதான் சோறு.பாவம் அன்னக்கிளிக்கு வேலயே செய்ய முடில.ரொம்ப எளச்சு போயிட்டா.

அந்த லூஸுப்பய அதான் அன்னக்கிளியோட புருஷன் அன்னக்கிளி பாவம்மா ஏம்மா இப்பிடி பண்ணறன்னு கேக்கவே மாட்டான்.வீட்டுத் தோட்டத்துல னிறைய காய்கறி செடிங்க இருந்திச்சு.

வெண்டை,கத்தரி,தக்காளி,அவரை,புடலைன்னு நிறைய காய்க்கும்.எல்லாத்தியும் மாமியார்க்காரி காசுக்கு வித்துடுவா.கொஞ்சமா வீட்டுக்கு சமைப்பா.தானும் புள்ளையும் மட்டும் சாப்பிடுவாங்க.

அன்னக்கிளிக்கு ஒண்ணுமே கிடையாது.வெறும் மோரு சோறுதான்.

ஒரு நாளைக்கு அன்னக்கிளியோட மாமியாருக்கு வெளியூர் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு.

ரெண்டு நாளைக்குப் மட்டும் போதுமான மளிகைப் பொருளை எடுத்துவச்சுட்டு ஸ்டோர் ரூமைப் பூட்டி சாவிய கையில எடுத்துக்கிட்டு வீட்ட பத்ரமா பாத்துக்கோ..தப்பா ஏதாவது செஞ்சுவெச்ச.. கொன்னுடுவேன் அப்பிடின்னி சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பினாங்க.

அவங்க அன்னண்ட போனதும் தோட்டத்துக்குப்போன அன்னக்கிளிக்கு செடில இருந்த கத்திரிக்காயப் பாத்ததும் கத்தரிக்கா ரோஸ்ட் பண்ணி சாப்படனும் போல ஆசையாய் இருந்திச்சு.ஒரு பத்து கத்ரிக்காய பறிச்சுக்கிட்டு வந்த அன்னக்கிளி அப்பிடியே கம கமன்னு சூப்பரா ரோஸ்ட் பண்ணினா.

ஒடனே திங்கணும்போல ஆசையா இருந்திச்சு.பாவம்தானே அன்னக்கிளி.

ரோஸ்ட் பண்ணி அடுப்புலேந்து ஏறக்கினா அன்னக்கிளி.அப்போ..அன்னக்கிளி..ஏ..அன்னக்கிளி..

அடியே சனியனே..என்ன பண்ர..கதவத் தொறடி..அப்பிடீன்னு ஒரு குரல்.வேற யாரு?மாமியார்தான்.

திக்குன்னு ஆயிடுச்சி அன்னக்கிளிக்கு.ஐயெய்யோ..அத்தயோட கொரலு மாரில்ல இருக்கு?....

ஊருக்குப் போனவங்க ஏன் திரும்பிட்டாங்க..ஐயெய்யோ இப்ப என்ன செய்வேன்...இந்த கத்தரிக்கா ரோஸ்ட்ட எங்க ஒளிச்சு வெப்பேன்?பாத்துட்டாங்கன்னா கொன்னுடுவாங்களேன்னு பயந்து போய்ட்டா அன்னக்கிளி.சட்டுன்னு இலுப்பச்சட்டியோட ரோஸ்ட்ட ஒரு பீரோக்கு அடீல ஒளிச்சுவச்சுட்டு வேகமா போய் வாசக் கதவ தொறந்தா.

ஏண்டி மூதேவி கதவத் தொறக்க இத்தன நேரமா..என்னபண்ணிக்கிட்டு இருந்த நானே ஊருக்குப் போக வண்டி கெடைக்காம கஷ்ட்டப்பட்டுக்கிட்டு திரும்பி வர்ரேன்..ஒனெக்கென்ன நல்லா தின்னுட்டு தூங்கிட்டயா அப்பிடின்னு திட்டினாங்க.அத்த..இல்லீங்க அத்த..பாத்ரம் கழுவிக்கிட்டு இருந்தேன் அப்பிடின்னு அன்னக்கிளி சொல்லவும் அவ பேச்ச நம்பாம சமையல் அறையை எட்டிப்பாத்தாங்க மாமியார்க்காரி.

ம்ம்ம்ம்....இதென்ன ஏதோ வாசனயா இருக்கு அப்பிடின்னு சுத்தியும் முத்தியும் பாத்தாங்க.பீரோக்கு அடிலேந்து வாசன வரத கவனிச்சுட்டாங்க.அவ்வளவுதான் அன்னக்கிளிக்கு பயத்துல உடம்பே நடுங்க ஆரம்பிச்சுடுத்து.

வேகமா போயி இலுப்பச்சட்டிய வெளியே இழுத்தாங்க.கமகமன்னு கத்திரிக்கா ரொஸ்ட் இருக்கிறத பாத்தாங்க.அவ்வளவுதான் கோவத்துல பேயாட்டம் ஆடினாங்க.டேய்..இங்க வாடான்னு புள்ளய கூப்டாங்க.

ஏய்..இவள..மூட்டையா கட்டுடா அப்பிடினாங்க..வரட்டி,உறிமட்டை,எல்லாதையும் பெரிய கோணிப் பையில போட்டாங்க..அன்னக்கிளி அழ அழ அவளையும் அந்த கோணீல ஒக்கார வெச்சு இறுக்கி கட்டினாங்க..எலேய்..இவள ஆத்தோரம் கொண்டு வ்ச்சு மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்திவிடுடா அப்பிடீன்னு சொன்னாங்க அந்த பொல்லாத மாமியார்க்காரி.

அந்த அசட்டுப் பிள்ளையும் சரின்னு தலய ஆட்டிட்டு அன்னக்கிளி இருந்த மூட்டையைத் தலையில் தூக்கி வெச்சுக்கிட்டு மண்ணென்ணை டின்னையும் தூக்கிக்கிட்டு ஆத்த நோக்கிப் போனான்.

ஆத்தின் கரையில் மூட்டைய இறக்கி வெச்சான்.டின்ன கீழ வெச்சான்.அப்பதான் தீப்பெட்டி கொண்டு வல்லன்னு நெனவு வந்திச்சு.சரி வீட்டுக்குப்போயி தீப்பெட்டி கொண்டு வரலாம்ன்னு நெனச்சு திரும்ப வீட்டுக்குப் போனான்.

அன்னக்கிளியோட அசட்டுப் புருஷன் தீப்பெட்டி எடுத்துவர வீட்டுக்குப் போனானா அப்ப ரெண்டு மாடு மேய்க்கிற பசங்க அன்னக்கிளி இருந்த மூட்டைக்குப் பக்கமா வந்தாங்க.ஒரு பையன் சொன்னான் எலேய்..இந்த மூட்ட அசையுதுடா அப்பிடீன்னான்.அம்மாண்டா அப்பிடீன்னான் ரெண்டாவது பையன்.அவங்க பேசரத மூட்டைக்குள்ளேந்து கேட்ட அன்னக்கிளி கப்பாத்துங்க.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.