நல்ல பேரை வாங்க வேணும் பிள்ளைகளே.. - தங்கமணி சுவாமினாதன்
ஹாய்..குட்டீஸ்..உட்காருங்க...வால சுருட்டி வெச்சுகிட்டு சமத்தா ஒக்காந்திருக்கணும்..சரியா?....
சரியா..சரி ..வெரிகுட்..வெரிகுட்...நெருக்கி அடிச்சு ஒக்காராதீங்க..கொஞ்சம் எடம்விட்டு ஒக்காருங்க...குட்..குட்.. அப்பிடித்தான்..
இன்னிக்கி ஒங்களுக்கு ஒரு நல்ல கதைய சொல்லப்போறேன்.கதய கேட்டுட்டு நீங்க இதுல யார் மாதிரி இருக்கப் போறீங்கன்னு சொல்லணும்..என்ன சரியா?..குட்..குட்...
ஆதனூர்ன்னு ஒரு ஊரு.அந்த ஊர்ல வீராச்சாமி,சரோஜான்னு ஒரு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க.
அவங்களுக்கு ஆகாஷ்,சந்தோஷ்ன்னு ரெண்டு புள்ளைங்க.புளைங்களோட பேரு என்ன? சொல்லுங்க
பசங்களா...ம்ம்ம்...கரெக்ட்..ஆகாஷ், சந்தோஷ்.இதுல ஆகாஷ் மூத்தவன்... அப்ப சின்னவன் யாரு?..சரியா சொன்னீங்க.சந்தோஷ்.ஆகாஷுக்கு வயசு பண்ணண்டு.சந்தோஷுக்கு வயசு பதினொண்ணு.ஆகாஷ் ஆறாம் வகுப்பும் சந்தோஷ் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறாங்க.
இவங்ளோட அப்பா அம்மா இருக்காங்கள்ள அதான் வீராச்சாமியும் சரோஜாவும் அவங்க ரெண்டு பேரும் கூலி வேல செய்யறவுங்க.ரெண்டு பேருமே ரொம்ப நல்லவுங்க.ஒங்க எல்லாரோட அம்மா அப்பாவும் நல்லவுங்கதானே?ம்ம்ம்..ஆமா..ஆமா..எப்பவுமே எல்லாரோட அப்பா அம்மாவும்
நல்லவங்களாதான் இருப்பாங்க.வீராச்சாமிக்கும் சரோஜாக்கும் அதான் ஆகாஷ் சந்தோஷோட பெத்தவங்க...பெத்தவங்கன்னா அப்பா அம்மா புரிஞ்சுதா?அவங்க ரெண்டுபேருக்கும் ஒரு விஷயத்துல ரொம்ப வருத்தம்..சிலசமயம் அழக்கூட அழுவாங்க.ஏந்தெரியுமா?சொல்றேன் அதப்பத்தி.
மூத்த பையன் யாரு?ஆகாஷ்..அவன் மூத்தவங்கிறதுனால அவன் அண்ணன்.சின்னப் பையன் யாரு?
சந்தோஷ்..அதுனால அவன் தம்பி.அண்ணன் ஆகாஷ்... தம்பி சந்தோஷ்...நல்லா நெனவு வெச்சுக்கங்க..சரியா..?இதுல அண்ணன் இருக்கானே அண்ணன்..அதான்...ஆகாஷ் அவன் ரொமப மோசம்.ஏந்தெரியுமா?அவ ஒரு சோம்பேறி...தூங்குமூஞ்சி...அழுக்கு பய...தீனி பண்டாரம்..பொய் சொல்லி..படிப்பே வராத மக்கு பய..மட சாம்பிராணி..சண்ட கோழி...சொல்பேச்சு கேக்காத அடாவடி பையன்..வீட்டுலயே கொஞ்சம் கொஞ்சம் திருடுவான்...ஒழுங்கா ஸ்கூல் போகமாட்டான்...
ரோட்டோரக் கடைகள்ள விக்கிற ஈ மொய்க்கும் பண்டங்கள வாங்கித் தின்பான்.மொத்தத்துல வீட்டுக்கு அடங்காத அம்மா அப்பா பேச்ச கேக்காத பையன்.மொக்க.... பய.
ஆனா தம்பி சந்தோஷ் இருக்கானே அவன் அண்ணன் ஆகாஷுக்கு எதிர்மர.அவ்வளவு நல்ல பையன்.எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.ரொம்ப் ரொம்ப ரொம்ப னல்லா படிப்பான்.அவந்தான் க்ளாஸ்லயே எப்பவும் first.எல்லாஆஆஆஆஆஆருக்கும் சந்தோஷ ரொம்ப புடிக்கும்.கூடுதலா அவங்கிட்ட சாமி பக்தியும் சேமிக்கிற பழக்கமும் இருந்திச்சு.பெத்தவங்க பேச்ச தட்டவே மாட்டான்.
இப்ப சொல்லுங்க நீங்க ஆகாஷ் மாரி மோசமானவங்களா?சந்தோஷ்மாரி நல்லவங்களா?
சந்தோஷ் மாரி நல்ல பசங்களா?..வெரி வெரி குட்.அப்பிடிதான் இருக்கணும்.
ஒரு நாளைக்கு ஆகாஷ் என்ன பண்ணான் தெருவுல வெளையாடிக்கிட்டு இருந்த பசங்கள்ள ஒத்தன கல்லால அடிசிட்டான்..அந்த பையனோட தலைலேந்து ரத்தமா கொட்டிச்சு.அந்த பையன் அழுதுகிட்டே அவனோட வீட்டுக்குப்போனான்.அவன் அம்மாவும் அப்பாவும் ஆகாஷோட அம்மாட்ட வந்து சொன்னாங்க.அதுனால ஆகாஷோட அம்மா அவன கண்டிச்சு முதுகில ரெண்டு வெச்சாங்க.
அப்பிடிதானே அடி வெப்பாங்க ஊரு வம்ப இழுத்துக்கிட்டு வந்தா?ஒடனே ஆகாஷ்க்கு மூக்கு மேல கோவம் வந்திடிச்சு..கிடுகிடுன்னு உள்ள போயி பாத்தரத்துல வெச்சிருந்த பால எடுத்து கொட்டிட்டான்.இப்பிடி செய்யிரது தப்பா இல்லியா?சொல்லுங்க..தப்புதான்றீங்களா?கரெக்ட்.
இப்பிடி எதுக்கும் அடங்காத தங்ளோட மூத்த புள்ள ஆகாஷ நெனெச்சு அவனோடஅம்மாவும் அப்பாவும் வருத்தப்பட்டு அழுவாங்களா மாட்டாங்களா?அழுவாங்கதானே? சந்தோஷ்.அம்மாவும் அப்பாவும் அழுவரத பாத்து... ஆகாஷ் அண்ணா ஏனிப்பிடி நடந்துக்கிற அம்மாவும் அப்பாவும் அழுவுறாங்க பாரு அப்பிடின்னான்.ஒடனே ஆகாஷ் போடா நீ என்னடா சொல்லரது..எனக்கு அப்பரம் பொறந்தவண்டா நீ..நீல்லாம் எனக்கு புத்தி சொல்லாத அப்பிடின்னு சந்தோஷப் போட்டு அடிச்சிட்டான்.இது மாதிரியே அடிக்கடி நடக்கும்.தன்னோட அண்ணன் இப்பிடி போக்கிரிப் பையனா இருக்கரத நெனச்சு சந்தோஷுக்கு ரொம்ப வருத்தம்.ஆனா எதப்பத்தியும் கவலப்படாம ஒழுங்கா ஸ்கூலுக்கும் போகாம ஆகாஷ் சேரக்கூடாத பசங்களோட சேந்துக்கிட்டு ஊரசுத்திக்கிட்டு இருந்தான்.
திடீர்ன்னு ஆகாஷ்க்கு ஒரு ஆசை..வேண்டாத ஆசை ஒண்ணு ஏற்பட்டுச்சு.அது என்ன தெரியுமா?
காதுல ஒயர சொருக்கிக்கிட்டு நடு ரோட்டுல தலையதலைய ஆட்டிகிட்டு பாட்டுக்கேட்டுக்கிட்டே போவாங்களே..இந்த பஸ்ஸு,ரெயிலு இதுலெல்லாம் கூட காதுல ஒயர சொருகிக்கிட்டு பாட்டு கேப்பாங்களே...எல்லார் கையிலயுங்கூட இருக்குமே.அதுல.பேசிக்கிட்டே இருப்பாங்களே ..ஆங்..
ஆமா..ஆமா..அதுதான்... அதுதான் செல்போன்..செல்போன் சரியா சொன்னீங்க...செல்போன் வாங்கணும்ன்னு அவனுக்கு ஒரு ஆச வந்திடிச்சு.ஒழுங்கா படிக்கவேண்டிய வயசுல படிக்காம செல்போன் வாங்கிக்கணும்ன்னு ஆசப் படறது தப்புதானே?என்ன நான் சொல்றது...சரியா? இல்லியா?
செல்போன் வாங்க பணம்?கொறஞ்சது 2,000 ரூபாயாவது வேணுமில்ல?ஒங்களுக்குத்தெரியிது... அந்த மட்டிப் பய ஆகாஷ்க்கு எவ்வளவு பணம் வேணும்ன்னு கூட தெரியல.ஆனா செல்போன் வாங்க பணம் வேணும்ன்னு மட்டும் தெரிஞ்சிச்சு.பணத்துக்கு எங்க போருதுன்னு யோசிச்சான். ஒரு plan போட்டான்.
ஒரு நாளைக்கு காலைல ஆகாஷோட அம்மாவும் அப்பாவும் வெளில வேலைக்கு கெளம்பினாங்க. சந்தோஷும் ஸ்கூலுக்குக் கெளம்பிட்டான்.ஆகாஷ் மட்டும் ஸ்கூலுக்கு கெளம்பல.தலைய வலிக்குது ..நான் வீட்டுலேயே இருக்கேன் அப்பிடின்னு சொல்லிட்டான்.வீட்ட பத்திரமா பாத்துக்கன்னு சொல்லிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குப்போய்ட்டாங்க.சந்தோஷும் ஸ்கூலுக்குப் போய்ட்டான்.ஆகாஷ் மட்டும் வீட்டுல தனியா இருந்தான்.அம்மா அப்பா எங்கியாவது பணம் வெச்சிருக்காங்களான்னு வீடு முழுக்க தேடி..தேடி..தேடி..தேடி..தேடி பாத்தான்.எங்கியுமே பணம் கிடைக்கல.கோவத்துல எல்லா பொருளையும் கலச்சு கன்னா பின்னான்னு போட்டான்.