(Reading time: 2 - 3 minutes)

வினோத செய்திகள் - 2021ல் மட்டும் ₹208.3 கோடி சம்பாதித்த 7 வயது சிறுமி – அதிகம் சம்பாதித்த பெண் யூடியூபர்!

யூடியூப் மூலம் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 யூடியூப் படைப்பாளிகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

   

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, பட்டியலில் உள்ள ஒரே பெண் 7 வயது சிறுமி மட்டுமே.

  

யூடியூப்பில் Nastya என்று அழைக்கப்படும் அனஸ்தேசியா ராட்ஜின்ஸ்காயா, தனது 11 யூடியூப் சேனல்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளார்.

  

2021 ஆம் ஆண்டில் விளம்பரங்கள் மற்றும் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் அந்த சிறுமி $28 மில்லியன் (₹208.3 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

  

Nastya பல தலைப்புகளில் விடியோ ப்ளாகிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறாள். அந்த விடியோக்களை அவரின் பார்வையாளர்கள் விரும்பி பார்த்து, பின்பற்றுகிறார்கள்.

  

Nastya தவிர வேறு ஒரு பெண் இந்தப் பட்டியலில் கடைசியாக இடம் பிடித்தது 2017 ஆண்டில். அந்த வருடம் லில்லி சிங் இதே பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்தார்.

  

2018 பட்டியலில் பெண்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

   

அதிசய உலகம் - மற்ற கட்டுரைகள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.