(Reading time: 2 - 4 minutes)

சினிமா சுவாரசியங்கள் - கவர்ச்சி நடிகையும் நானே சைன்ட்டிஸ்ட்டும் நானே

லகின் மிக அழகான பெண்” – இது தான் நடிகை ஹெடி லமார் ஹாலிவுட்டில் அறிமுகமானப் போது அவருக்கு கொடுக்கப் பட்ட பட்டப் பெயர்.

 

1940க்களில் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையாக இருந்தவர் ஹெடி லமார்.

  

ஆஸ்திரியாவில் பிறந்து வளர்ந்த ஹெடி லமாரின் ஆரம்பக் கால ஐரோப்பிய படங்கள் கவர்ச்சி நிறைந்தவை! சில சர்ச்சை நிறைந்தவையும் கூட.

அவருடைய அழகில் மயங்கிய பணக்காரர் ஒருவர் ஹெடி லமாரை திருமணம் செய்துக் கொண்டார். கல்யாணத்திற்குப் பின் ஹெடி லமாரின் ஒவ்வொரு செய்கையையும் கட்டுப்படுத்தி சிறைப்பறவைப் போல கணவர் வீட்டில் அடைத்து வைத்திருந்தார். அந்த வாழ்க்கை பிடிக்காமல் வேலைக்காரிப் போல வேஷம் போட்டு அங்கிருந்து தப்பித்து பிரான்ஸ் வழியே ஹாலிவுட் வந்து மீண்டும் நடிகை ஆனார் ஹெடி லமார்.

 

ஹாலிவுட்டிலும் கவர்ச்சி நடிகையாக நிறைய படங்களில் நடித்தார். புகழும் பெற்றார்.

  

திகம் படிக்காதவர் என்றாலும் ஹெடி லமாரின் பொழுதுப்போக்கு சைன்ஸ் கண்டுப்பிடிப்புகள். இரண்டாம் உலகப்போரின் போது தொலைவில் இருந்து இயக்க கூடிய நீர்மூழ்கி கப்பல்கள் புகழ் பெற்று இருந்தன. இந்த நீர்மூழ்கி கப்பல்களை இயக்கும் பிரீக்வென்ஸி தெரிந்தால் அதை குழப்பி தவறான திசைகளில் அதிலிருக்கும் குண்டுகளை வெடிக்க செய்ய முடியும். இதை தடுக்க frequency hopping எனும் முறையை கண்டுப்பிடித்தார் ஹெடி லமார். இதற்கு காப்புரிமையும் பெற்றார்.

இந்த கண்டுப்பிடிப்பை பிற்காலத்தில் அமெரிக்காவின் கப்பல் படையிலும் பயன்படுத்தினார்கள்.

  

வர்ச்சி நடிகை என்றுப் பெயர் பெற்றாலும் ஒரு கண்டுப்பிடிப்பின் வழியே படிக்காத மேதையாக தன்னை வெளிபடுத்திக் கொண்ட ஹெடி லமார் 2000ல் காலமானார்.

 

அவருடைய திரைப்படப் புகழும், கண்டுப்பிடிப்பும் இன்றும் நிலைத்திருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.