Chillzee சமையல் குறிப்புகள் - வெள்ளரிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1
தேங்காய் துருவல் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 1
உப்பு – தேவைக்கு
தயிர் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை
வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், ஜீரகம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் வெள்ளரிக்காய் மற்றும் அரைத்த விழுதுடன் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெள்ளரிக்காய் வெந்த உடன், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஸ்டவ்வை அணைத்து விடவும்.
இன்னொரு சின்ன கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்ததை வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து கலக்கவும்.
மேலே கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான, செய்வதற்கு சுலபமான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.