(Reading time: 2 - 4 minutes)
TV Specials
TV Specials

மூவி / டிவி ஸ்பெஷல்ஸ் – ரொமான்டிக் - அ கலிபோர்னியா கிறிஸ்துமஸ்

சென்சார் – US - PG13

வகை – ரொமான்டிக்

நடிப்பு – லாரன் ஸ்விகார்ட், ஜோஷ் ஸ்விகார்ட்

  

கலிபோர்னியா கிறிஸ்துமஸ் - A California Christmas இந்த வாரம் வெளி வந்திருக்கும் பேமிலி, ரொமான்ட்டிக் திரைப்படம்.

   

கதை

ஜோசப் பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் பணக்கார இளைஞன். அவனை பொறுப்பானவனாக மாற்ற அவனுடைய அம்மா முயற்சி செய்கிறார். கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு பண்ணையை அதன் உரிமையாளரிடம் பேசி விற்க சம்மதிக்க வைக்கும் வேலையை கொடுத்து ஜோசப்பை கலிபோர்னியா அனுப்பி வைக்கிறார். இந்த வேலையை குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த பண்ணையின் உரிமையாளர் வெண்டி நோய் வாய்ப்பட்டிருக்கிறார். பண்ணையை அவருடை மூத்த மகள் கேளி கவனித்து வருகிறாள்.

ஜோசப்பை பண்ணையில் வேலை செய்ய வந்த ஆள் என்று தவறாக நினைத்து வேலைக்கு சேர்த்துக் கொள்கிறாள் கேளி.

ஜோசப்பும் கேளி மற்றும் வெண்டியின் மனதை மாற்ற இதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறான்.

முதலில் ஜோசப்பிடம் எரிந்து விழும் கேளி, போக போக அவனின் நல்ல மனதை பார்க்க தொடங்குகிறாள். நடிக்க வந்திருக்கும் ஜோசப்பும் கேளியை காதலிக்க தொடங்குகிறான்.

ஜோசப்பின் அம்மா கொடுத்த தேதி நெருங்கி வர வர கேளி யிடம் உண்மையை எப்படி சொல்வது, என்ன சொல்லி கையெழுத்து கேட்பது என்று வருந்துகிறான் ஜோசப்.

கேளிக்கு ஜோசப் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்பதும், பண்ணையை அவள் விற்காமல் காப்பாற்றினாளா என்பதும் படத்தின் க்ளைமாக்ஸ்.

 

லைட் ஹார்டட் ரொமான்ஸ் பிரியர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.

விடுமுறை நாளில் பார்க்க நல்ல ஒரு ரொமான்டிக் திரைப்படம்! 👍👍👍👍

Trailer

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.