தனக்காக பாராளுமன்றத்தில் பேசி அனுமதி வாங்கித் தர வேண்டும் என்று கேட்கிறாள். சர்ச்சிலும் சம்மதிக்கிறார்.
ஆனால் பாராளுமன்ற மந்திரிகள் சர்ச்சிலின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதை எலிசபெத்திடம் நேரடியாக சொல்ல முடியாமல், எட்வர்ட்டின் உதவியை கேட்கிறார் சர்ச்சில். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு தனக்காக எலிசபெத்திடம் பேசி பணம் பெற்றுத் தர சொல்கிறார் எட்வர்ட். அப்படியே தன் மனைவிக்கு மற்ற அரச பரம்பரையினருக்கு கொடுப்பதுப் போல பட்டம் தரவும் கேட்கிறார். சர்ச்சிலுக்கு அது பிடிக்காமல் போகிறது!
எட்வர்ட் எலிசபெத்தை சந்தித்து பேசுகிறார். அவர்கள் பேச்சில் அனல் பறக்கிறது. ஆனாலும் எட்வர்டுக்கு தனக்கு துணையாக இருக்கும் அட்வைசர் பதவி வழங்குகிறார் எலிசபெத்.
சர்ச்சில் தன்னிடம் சொன்னதை எலிசபெத்திடம் பகிர்கிறார் எட்வர்ட்.
பிலிப்பின் கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டுவிட்டதை வருத்தத்துடன் கணவரிடம் சொல்கிறார் எலிசபெத்.
“என்ன மாதிரியான கல்யாணம் இது? என்ன மாதிரியான குடும்பம் இது?? என் பெயர் என் பிள்ளைகளுக்கு இல்லை, என் வீடு எனக்கு இல்லை, என் வேலையும் எனக்கில்லை!” என பிலிப் கோபப் படுகிறார்!
ஆனாலும் எலிசபெத்திற்காக அமைதியாக இருக்கிறார்!
ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.