(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 35 - அழகு சேர்க்கும் பால்

கால்சியம் நிறைந்த பால் எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது எனது நமக்கு தெரியும். அது மட்டுமல்லாமல் அழகான சரும பராமரிப்புக்கும் கூட பால் பயனுள்ளது!

 

சருமத்தை சுத்தப்படுத்த (cleanser):

2 டீஸ்பூன் பாலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும்.

இதை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு, நீரில் கழுவுங்கள்.

சுத்தமான, தெளிவான சருமம் உங்களுக்கே!

 

ஒளிரும் சருமத்திற்கான பேக்:

1 டீஸ்பூன் அரைத்த பாதாம் விழுது, 1 ஸ்பூன் காயவைத்த ஆரஞ்சு தோலுடன் பால் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த கலவையில் சுமார் 2 முதல் 3 சொட்டு ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும்.

இதை அப்ளை செய்து சுமார் 20 நிமிடங்கள் உலர அனுமதிக்கவும்.

பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள், ஒளிரும் சருமம் பெறுவீர்கள்.

 

உலர்ந்த சருமத்திற்கான பேக்:

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பால் ஒரு சிறந்த நிவாரணி!

1 வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து, தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்யுங்கள்.

இதை உலர்ந்த சருமத்தில் அப்ளை செய்து, நன்றாக காய்ந்த பிறகு நீரில் கழுவி விடுங்கள்.

உடனே சிறிது பாலினால் அதே இடத்தில் மசாஜ் செய்து, மீண்டும் நீரில் கழுவி விட்டால் சருமம் ஈரப்பதம் பெற்று அழகாகும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.