(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 85 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா 

ணவுக்கு பிறகு ஒரு கப் வெதுவெதுப்பான நீரை அருந்தினால் ஜீரண சக்தி துரிதமாகும் மலச்சிக்கல் பிரச்சனை வராது

முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டாமல் அதனை செடிகளில் ஊற்றினால் செடிகள் நன்கு வளரும்

கைகளில் மண்ணெண்ணெய் கொட்டிவிட்டால் உடனே மோரால் கையை கழுவுங்கள் நாற்றம் உடனே அகலும்

ப்ளாஸ்டிக் சாமான்களை உப்பு நீரில் கழுவினால் கெட்ட வாடை வராது

வெந்நீரில் குளிக்கும் போது காலிலிருந்து ஆரம்பித்து உடல்முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும் இதனால் உடலில் ஏறும் சூடு தலையை பாதிக்காமல் இருக்கும்

தொண்டை கமறலுக்கு ஒரு வசம்பு துண்டை வாயில் போட்ட மென்றால் வரும் நீரை உள்ளுக்கு இறக்கிக் கொண்டே வந்தால் தொண்டை கமறல் சரியாகிவிடும்

வாய்ப்புண் ஆற முற்றின தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு  மென்று சாறை மட்டும் உள்ளுக்கு இறக்கினால் வாய்ப்புன் ஆறிவிடும்

சூடான சாதத்தில் வறுத்து பொடித்த மிளகு சீரகப்பொடி கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட்டால் ஜீரணக்கோளாறு அகலும் நன்கு பசியெடுக்கும்

ணவில் மேக்னீஷியம், உப்பு குறைந்தால் இதய நோய் நீரிழிவு நோய் உண்டாகும் அதற்கு அரிசி, வேர்க்கடலை, பசலைக்கீரை, கோதுமை, வாழைப்பழம், அவரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்

காலையில் வெறும் காபி மட்டும் குடித்துவிட்டு டிபன் சாப்பிடாமல் மதியம் இரவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தலை வலி வாயு தொல்லை வரும் காலை உணவு மிகவும் அவசியம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.