(Reading time: 2 - 3 minutes)
Plant proteins are lower than chicken protein
Plant proteins are lower than chicken protein

பிளான்ட் ப்ரோட்டீன்கள் சிக்கன் ப்ரோட்டீனை விட குறைவாக இருக்கிறதாம்!

ப்போது லேட்டஸ்டாக ட்ரென்ட் ஆகிக் கொண்டிருக்கும் பிளான்ட் பேஸ்ட் உணவுகள் உண்பவர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காக தான்!

   

ஒரு புதிய ஆய்வின் படி,  தாவர அடிப்படையிலான உணவில் உள்ள புரதங்கள் கோழி புரதங்களைப் போல நம் உயிரணுக்களுக்கு சுலபமாக கிடைப்பது இல்லை என்று கண்டுப் பிடிக்கப் பட்டுள்ளது.

   

இந்த ஆய்வுக்காக, தாவர உணவு மற்றும் கோழி இறைச்சி இரண்டையும் நன்றாக வேக வைத்தார்கள். பின் அதை நன்றாக அரைத்து, மனிதர்கள் உணவை ஜீரணிக்க பயன்படுத்தும் ஒரு என்ஸைம் பயன்படுத்தி உடைத்தார்கள்.

   

இதில், தாவர உணவுகள் சிக்கன் போல தண்ணீரில் சரியாக கரையவில்லை என்பதை முடிவுகள் காட்டுகின்றன. அதனால் அவை மனித உயிரணுக்களால் எளிதாக உறிஞ்சப்படுவதில்லை.

   

இதனால் பிளான்ட் பேஸ்ட் உணவுகள் நின்று விடாது, மாறாக, இந்த புதிய புரிதல், தாவர அடிப்படையிலான உணவின் பெப்டைட் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும் பிற பொருட்களை அடையாளம் காண உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.