(Reading time: 5 - 10 minutes)

6. பனிப்பாறை – கல்பனா

ம்பன் ஏமாந்தான் பாரதியோட நம்பிக்கை பொய்யாக போனால் என்ன ஆகும்?

அந்த நிலை தான் இங்கே கல்பனாவிற்கு!

சரி ஏதோ நடந்தது நடந்து விட்டது என்று ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், எனக்கு நீ வேண்டவே வேண்டாம் என்று விடவும் முடியாமல்... பாவம் தான் இவங்க.

ஆண்களை விட பெண்கள் அதிகமான பாசம் & அன்பு வைத்து விடுகிறோம்னு நினைக்கிறேன்.

சில சமயங்களில் அது வரம், சில சமயங்களில் அது சாபம்.

பெண்களுக்கு தன்னம்பிக்கையும், சுய-சம்பாத்தியமும் தேவை என்று எனக்கு எடுத்து சொல்லிய பாத்திரம் இவங்க.

 

7. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? – அருந்ததி

னக்கு இவங்க கிட்ட ரொம்ப பிடித்தது அவங்களோட innocence.

ஒரு க்யூட்டான கேரக்டர் இவங்க. ஷிவா சார் ரொம்ப லக்கி :-)

ஒரு மருமகளா, மனைவியா அவங்க transform ஆகும் விதம் எனக்கு பிடித்த ஒரு விஷயம்.

 

8. மலர்கள் நனைந்தன பனியாலே - துளசி

ந்த கதையில் ரொம்ப அதிகமா கிரெடிட் கொடுக்காத ஆனால் முக்கியமான ஒரு பாத்திரம் இவங்க.

நம்முடைய நிஜ வாழ்க்கையிலும் இப்படி சிலரை பார்க்கலாம். யோசித்து பார்த்தால், 'எனக்காக இவ்வளவு செய்திருக்காங்களே'ன்னு தோணும். ஆனால் யோசிக்காத வரை அவங்களோட அருமை தெரியாது :-)

ஒரு பெஸ்ட் உதாரணம் அம்மா!

அம்மா தனக்காக எவ்வளவு செய்திருக்காங்கன்னு தான் அம்மா ஆகும் முன் realize செய்யும் பெண்கள் ரொம்பவே குறைவுன்னு நினைக்கிறேன்.

ஒரு தோழியாக மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட தாயாக இருந்து நந்திதாவிற்கு வழி காட்டும் துளசி எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு கதாபாத்திரம்.

 

9. ரோஜாவை தாலாட்டும் தென்றல் – கிருத்திகா

ஹீரோயின்னா, அமைதியா பேசி, பொறுமையா இருந்து, பரிவா நடந்துக்கனும்னு, சட்டமா?

நான் கிருத்திகாடா!!!

அப்படின்னு கபாலி ஸ்டைல்ல வந்த ஹீரோயின் இவங்க!

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கேரக்டர்.

என்னோட ஸ்கூல் பிரென்ட், உன்னை மாதிரியே இருக்காங்கன்னு கலாட்டா செய்து மெசேஜ் செய்தப்போ ஹி ஹின்னு இளிச்சு (சமாளிச்சு) என்னை blush செய்ய வைத்தவங்க :-)

 

10. மலையோரம் வீசும் காற்று – ரச்னா

பெண்களுக்கு பல விதங்களில் பிரச்சனைகள் வருகின்றன. குடும்பம், சமூகம், வேலை, உடல் நலம் etc etc.

படிப்பும், பணமும் மட்டும் அவர்களுக்கு பாதுகாப்பும், நல்ல வாழ்க்கையையும் கொடுத்து விடுமா?

மேல் தட்டு பெண்களுக்கு பிரச்சனைகளே இல்லையா என்ன?

இந்த கேள்விகளுக்கு பதில் காணும் ஒரு முயற்சி தான் இந்த கதாபாத்திரம்.

என்னை பொறுத்தவரை எந்த நிலையில் இருந்தாலும் பெண்களின் core உணர்வுகள் ஒன்றே தான்.

 

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் _/\_ _/\_

ன்னால் முடியாது, இதெல்லாம் நடக்காது என்று நமக்கு நாமே ஒரு குறுகிய எல்லையை வைத்துக் கொள்ளாமல், வானமே எல்லை என்று அந்த வட்டத்தை விட்டு வெளியே வருவோம்!

சாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை!


டுத்த வாரம் கதை பற்றிய உரையாடலை தொடர்வோம். பை ஃபார் நவ் :-)

Naanum en kathaiyum - 02

Naanum en kathaiyum - 04

{kunena_discuss:1105}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.