(Reading time: 11 - 21 minutes)

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருந்த சக்குவின் கனவில் ஒரு நாள் கிழவர் தோன்றி குழந்தாய் திருமணத்தை மறுக்காதே இல்லறத்தில் இருந்தே இறைபணி செய்யலாம் அதனையே இறைவனும் விரும்புவான் என்றார்.சக்குவின் மனதில் மாற்றம் ஏற்பட்டது.

சக்கு திருமணத்திற்கு சம்மதிக்க அவளின் பெற்றோர் ஒரு நல்ல பையனாய்ப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.சக்குவின் அழகினைப் பார்த்து அவளின் கணவனுக்கு ஏகத்துக்கும் மகிழ்ச்சி.அவளோடு சந்தோஷமாய்க் குடும்பம் நடத்தலாம் என எண்ணி மகிழ்ந்தான்.அவன் சக்குவைத் திருமண செய்து கொண்டது அவனின் தாய்க்கோ சகோதரிக்கோ தெரியாது.

சக்குவின் கணவன் சக்குவை அழைத்துக் கொண்டு தன் ஊருக்கு தன் வீட்டுக்கு வந்தான்.தங்களுக்குத் தெரியாமல் அவன் திருமணம் செய்து கொண்டதால் அவனின் தாய்க்கும்  சகோதரிக்கும் அவன் மீதும் சக்கு மீதும் ஏக கோபம்.சாதாரணமாகவே சக்குவின் மாமியார் மிகவும் பொல்லாதவள்.இப்போது கேட்கவே வேண்டாம்.தன் மகளோடு சேர்ந்து கொண்டு சக்குவைக் கொடுமைப் படுத்த ஆரம்பித்தாள்.

காலையிலிருந்து இரவு வரை வேலை வேலை வேலை என்று வீட்டு வேலை செய்து கொண்டே இருந்தாள் சக்கு.அப்படி வேலை செய்யும் நேரத்திலெல்லாம் பாண்டுரங்கனையே தியானித்துக் கொண்டிருந்தாள்.

அப்படி தியானிக்கும் போது சில சமயம் அவள் கைகள் வேலையைத் தொடர்ந்து செய்யாது நின்றுவிடும்.

எதை வைத்து அவளைத் திட்டலாம் எனக் காத்திருக்கும் மாமியாரும் நாத்தனாரும் அவளைக் கடுமையாகப் பேசிக் கொடுமை படுத்துவார்கள்.வேலை நேரம் போக மிச்ச நேரம் கிடைத்தால் பாண்டுரங்கனைப் பாட ஆரம்பித்துவிடுவாள்.மனைவியோடு மகிழ்ச்சியாய் வாழலாம் என ஆசைபட்ட  கணவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அவனும் தாய் மற்றும் சகோதரியோடு சேர்ந்து கொண்டு சக்குவை அடிப்பது திட்டுவது என ஆரம்பித்தான்.ஆனால் சக்கு எதனையும் துன்பமாய் நினைக்கவில்லை.எப்போதும் போல் வேலை தியானம் என இருக்க... இத்தனை கொடுமைகளையும் தாங்கும் இவளுக்குப் பேய்தான் பிடித்திருக்க வேண்டுமென நினைத்த தாயும் மகனும் சக்குவை ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

சக்குவும் நல்லதாய்ப் போயிற்று என நினைத்து முழு நேரமும் பாண்டுரங்கனை நினைக்க ஆரம்பித்தாள்.

அப்படி சக்கு அறையில் அடைபட்டிருக்கு வேளையில் அவ்வறையின் ஜன்னல் அருகில் நின்று தெருவைப் பார்தபடி எவ்வளவு வருடம் ஆயிற்று அக்கிழவரைப் பார்த்து இனி என்று அவரைப் பார்ப்பேனோ என எண்ணினாள்.என்ன ஆச்சரியம்?அவள் கண் முன் தோன்றிய அக்கிழவர் அவளைப் பார்த்து ஆசிவதிப்பது போல் கைகளை ஆட்டிவிட்டு வீட்டு வாசலில் வந்து நின்று பிச்சை கேட்டார்.சக்குவின் மாமியாரும்,சக்குவின் கணவனும் அவரை விரட்டினர்.அப்படி விரட்டும் போது சக்குவின் கணவன் என் மனைவிக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று நாங்களே வருத்தத்தில் உள்ளோம் இதில் உனக்கு பிச்சை வேறு போடவேண்டுமா?எனப் புலம்பினான்.

அப்பனே என்ன சொன்னாய்?உன் மனைவிக்குப் பேய் பிடித்திருக்கிறதா?நான் மாந்திரீகம் தெரிந்தவன்.நன்றாகப் பேய் ஓட்டுவேன்.உன் மனைவியைப் பிடித்திருக்கும் பேயை நான் ஓட்டி விடுகிறேன் என்றார்.

அவர்களும் சந்தோஷம் அடைந்து அதற்கு ஒப்புக்கொண்டனர்.அந்தக்கிழவர் சக்குவை அவ்வூர் ஆற்றில் முழுகச் செய்து அவ்வாற்றின் கரையில் அமரச் செய்து மந்திரத்தை உச்சரித்து பேயை ஓட்ட வேண்டும் என்று கூற அவ்வாறே செய்யப்பட்டது.அப்படி செய்யும் வேளையில் சக்குவின் கணவனுக்கு சிறுனீர் கழிக்கும் எண்ணம் வர அவன் கொஞ்சம் மறைவிடம் நோக்கிச் சென்றான்.அந்த நேரத்தில்..மகளே சக்கு உனக்கு பாண்டுரங்கனை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது அவரை விரைவில் சந்திப்பாய் எனச் சொல்லி கிழவர் மறைந்துவிட்டார்.

அப்போது ஒரு பஜனை கோஷ்டி ஒன்று அவ்வழியாய்ப் பாண்டுரங்கன் மீது பஜனைப் பாடல்களைப் பாடியபடி பண்டரிபுரம் நோக்கி ஏகாதசி திருனாளுக்காகச் சென்றது.அக்கோஷ்டியில் கபீர் தாசர்,நாம தேவர் ஆகியோரும் இருந்தனர்.பஜனைப் பாடல்கள் காதில் விழுந்ததோ இல்லையோ சக்கு பாய் அக்கோஷ்டியை நோக்கி ஓடினாள்.அக்கோஷ்டியைச் சாஷ்ட்டாங்கமாய் வீழ்ந்து வணங்கினாள்.தானும் அவர்களோடு பண்டரிபுரம் வருவதாகக் கெஞ்சினாள்.கபீர்தாசருக்கு இப்பெண்மணி பாண்டுரங்கனின் அருள் பெற்றவள்..ஒரு சிறந்த பக்தை எனத் தோன்றியது.ஆனாலும் சக்குபாயை தங்களோடு அழைத்துச் செல்ல அவரை ஏதோ ஒன்று தடுத்தது.

பெண்ணே..நீ வீடு செல்..பாண்டுரங்கன் உன்னைத் தேடி வருவான்..அப்போது அவனே உன்னை அழைத்து வருவான்..அப்போது நீ பண்டரிபுரம் வரலாம் என்று சொல்ல பஜனை கோஷ்டி தன் பயணத்தைத் தொடர்ந்தது,

சக்குபாய் வருத்தத்தோடு வீடு வந்தாள்.அவளைத் தொடர்ந்து அவள் கணவனும் வந்து சேர்ந்தான்.சொல்லாமல் கொள்ளாமல் அவள் ஆற்றங்கரையிலிருந்து வந்தமைக்காக அவளைத் திட்டினான்.

சக்குபாய் கவலைப் படவில்லை.கணவனிடம் பண்டரிபுரம் செல்லவேண்டும் எனக் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.