(Reading time: 11 - 21 minutes)

ணவனோ இப்போது அதற்கு வசதி இல்லை பின்னர் பார்க்கலாம் என்றான்.சக்கு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.ஒரு கட்டத்தில் அவளின் பிடிவாதம் அதிகமாகவே சக்குவை ஒரு அறையில் தூண் ஒன்றில் கட்டிப்போட்டான் அவள் கணவன்.சக்கு பண்டரிபுரம் செல்ல முடியவில்லையே என எண்ணி அழுதாள்.

பக்தர்களின் அழுகையைப் பொறுப்பானா பாண்டுரங்கன்?சட்டென அவ்வறையில் இன்னொரு சக்கு தோன்றினாள்.இதென்ன விந்தை  எனப் பார்த்தாள் நிஜ சக்கு.என்னைப் போலவே இருக்கும் நீ யார் எனக் கேட்டாள் சக்கு பாய்.

சக்கு..நான் யார் என்பதை பிறகு சொல்கிறேன்.உனக்குப் பண்டரிபுரம் செல்ல வேண்டாமா?உனக்கு உதவவே வந்திருக்கிறேன்.என்னைக் இத் தூணில் கட்டிப் போடு.உனக்கு பதில் நான் இங்கே இருக்கிறேன்.

நீ பண்டரிபுரம் சென்று வா...என்றாள் புதிதாய் வந்த சக்கு.

இல்லை இல்லை வேண்டாம்..நான் பண்டரிபுரம் சென்ற பிறகு நீ பொய் சக்கு எனத் தெரியவந்தால் நான் மீண்டும் இங்கு திரும்பும்போது எனக்கு இவர்களால் ஏற்படும் இன்னல்கள் தாங்கமுடியாதவைகளாக ஆகும்.

ஆனாலும் எப்படியோ சக்குவை சம்மதிக்கவைத்த புதிய சக்கு தூணில் கட்டுண்டு நின்றாள்.யார் கண்களிலும் படாமல் நிஜ சக்குபாய் பண்டரிபுரம் நோக்கிச் சென்றாள்.

வள் சென்ற அடுத்த கணம் சக்குவின் கணவன் உள்ளே வந்தான்.எப்படி தூணில் கட்டப்பட்டுக் கிடக்கிறாய் பார்..இனிமேலும் பண்டரிபுரம் செல்லவேண்டும் எனக் கேட்பாயா?என புதிய சக்குவிட கேட்க..அவள் நடிக்க ஆரபித்தாள்.

என்னை மன்னித்து விடுங்கள்.இனியொரு முறை நான் பண்டரிபுரம் செல்ல வேண்டும் எனக் கேட்கமாட்டேன்.இந்தக் கட்டுக்கள் என் உடலை மிகவும் இறுக்குகிறது.உடல் நோகிறது.தயவுசெய்து அவிழ்த்து விடுங்கள் எனக் கெஞ்சினாள்.

அவனும் இவளை உண்மை என நம்பி அவிழ்த்து விட்டான்.அவள் நடிப்பு தொடர்ந்தது.பொய் சக்கு கடுமையாக உழைக்க ஆரம்பித்தாள்.நிஜ சக்குவைப் போல் பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்தாள்.

மாமியார் நாத்தனார் கணவரிடம் அதீத பக்தியும்,பாசமும்,மரியாதையும் காட்டினாள்.அனைவருக்குமே சக்குவின் இன்னடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நாட்கள் ஓடின.பண்டரிபுரம் சென்ற நிஜ சக்குவுக்கு வீடு திரும்பவே மனமில்லை.கபீர் தாசர்,ஜெய தேவர், நாம தேவரொடு சேர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பண்டரினாதனின் கோயிலிலேயே இருக்க விரும்பினாள்.

கபீர் தாசருக்கு கோயிலில் பாண்டுரங்கன் இல்லாதது போல் தோன்றியது.அவரின் கனவில் பாண்டுரங்கன் தோன்றி அவரின் நினைப்பு சரிதான் என்றும் சக்குவின் வீட்டில் தான் சக்குவின் உருவில் இருந்து தொண்டாற்றுவதாகவும் பண்டரிபுரத்திலிருந்து நிஜ சக்கு திரும்பும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் சொல்ல அப்படியே பாண்டுரங்கனின் பக்தற்கருளும் அன்பினைக்கண்டு நெகிழந்து போனார் கபீர் தாசர்.

பிறகு சக்குவிற்கு நல்ல வார்த்தைகள் கூறி அவளை ஊருக்கு அனுப்பினார் கபீர்தாசர்.ஊருக்குள் நுழைந்த சக்கு வீட்டுக்கு வரும் வழியில் தண்ணீர் குடத்தைத் தூக்கியபடி வந்த பொய் சக்குவைப் பார்த்தாள்.

என்னைப் போலவே உருவெடுத்து வந்து என் குடுப்பத்திற்காக இவ்வளவு நாட்கள் உழைத்தீர்களே?உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்?என கண்களில் கண்ணீர் வழியக் கேட்டாள்.அவள் கண்களில் வழிந்த கண்ணீர் பொய் சக்குவின் மேல் பட்டுத் தெரித்தது.அடுத்த கணம் பொய் சக்கு சங்கு சக்கரதாரியாக அங்கே பாண்டுரங்கனாக மாறி நின்றாள்.

பாண்டுரங்கா..பண்டரினாதா..நீயா இவ்வளவு நாள் என் வீட்டில் இருந்து ஊழியம் செய்தாய்..?விட்டலா..விட்டலா..என பக்தி மேலிட சத்தம் போட்டாள்.அப்படியே நிலத்தில் வீழ்ந்து வணங்கினாள்.

நடந்த அனைத்தையும் அறிந்த சக்குவின் கணவன் தனக்கு இப்படியொரு மனைவி கிடைத்தாளே..

இவளின் பக்திக்காக இறைவனே அல்லவா நம் வீட்டில் ஊழியம் செய்துள்ளான்..என என்ணி எண்ணி மகிழ்ந்தான்.

பிறகு சக்குவின் மாமியாரும் நாத்தனாரும் மனம் திருந்தினர்.அனைவருமே பாண்டுரங்கனின் பக்தர்களாயினர்.பிறகு சக்குவின் வீட்டில் எப்போதும் பாண்டுரங்க பஜனைதான் ஒலித்தது.நெடுங்காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்த சக்குவும் அவள் கணவனும் பாண்டுரங்கனின் திருவடிகளை அடைந்தனர்.

 சொல்லச் சொல்ல இனிக்குதடா..பாண்டுரங்கா..உன் பெயரை..சொல்லச் சொல்ல...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.