(Reading time: 2 - 4 minutes)

 உலகம் நம் கையில் - சாவிகளுக்கு விமோசனம் 🔑

லோ ஃபிரென்ட்ஸ்! இந்த வாரம் நாம பேசப் போறது, 'நல்லா யோசிச்சிருக்காங்களே'ன்னு எனக்கு தோன்றிய ஒரு பொருள். 

 

பூட்டு சாவியை எப்போது கண்டுப்பிடித்தார்களோ அப்போது இருந்தே இருக்கும் ஒரு பிரச்சனை சாவியை எங்கே வைத்தோம் என்கின்ற கேள்வி!

வீட்டு சாவி, கார் சாவி, மாடி சாவி எக்ஸட்ரா எக்ஸட்ரா என்று நிறைய சாவிகள் வேறு!

 

இது போல கன்னாபின்னாவென்று இருக்கும் ஒன்றை சீராக்கி சரி செய்ய வந்திருக்கும் innovative சொலுஷன் “கீ ஸ்மார்ட் ப்ரோ”

keysmartPro 

நம்ம பழைய நெயில் கட்டர் போல சாவிகளை அழகாக இதில் வைத்து ஆர்கனைஸ் செய்துக் கொள்ளலாம். பத்து சாவிகள் வரைக்கும் பிடிக்கும்! எனவே எடுத்து செல்வதும் ரொம்ப சுலபம்.

 

லேட்டஸ்டாக ப்ளூடூத், ஜிபிஎஸ் டெக்னாலஜியும் சேர்த்திருக்கிறார்கள்.

ஒருவேளை சாவியை காணவில்லை என்றாலும், இதன் கூட வரும் ஆப் பயன்படுத்தி நம் சாவிகள் எங்கே இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளலாம்.

 

வீட்டுக்குள்ளேயே சாவியை தேட வேண்டும் என்றால் மொபைல் போன் போல ரிங் செய்தும் கண்டுப்பிடிக்கலாம்!

 

ந்த காலத்துக்கு ஏற்ற நல்ல பயனுள்ள ஒரு புதுமையான கேட்ஜட் இது.

 

யாருக்காவது வித்தியாசமான கிஃப்ட் வாங்க வேண்டுமென்றாலும் நல்ல ஒரு சாயிஸ்.

 

நான் ஆரம்பத்தில் சொன்னதுப் போல சாவி காணோம் என்பது காலா காலமாக நாம் கேட்கும் ஒரு பிரச்சனை. அதற்கு தீர்வு என்று யாரோ தேட தொடங்கிய உடனேயே என்ன மாதிரியாக யோசித்திருக்கிறார்கள்!

 

நல்ல காரணத்திற்காக யோசித்தால் எப்படி அருமையாக மனிதர்களுடைய மூளைத்திறன் செயல்படுகிறது! ஆச்சர்யமாகவும் இருக்கிறது! அதிசயமாகவும் இருக்கிறது!

 

பட்ஜெட் டிப்!

இந்தியாவில் இதன் விலை 7500 ரூபாய்! கொஞ்சம் அதிகம் தான்!

பட்ஜெட்டில் கிஃப்ப்டாக வாங்க யோசித்தால் ஜிபிஎஸ் / ப்ளூடூத் இல்லாத கீ ஆர்கனைசர் தேடிப் பாருங்கள். அது 400 ரூபாய் முதலே கிடைக்கிறது!

    

டுத்த வாரம் இன்னுமொரு புதுமையான (innovative) பொருள் அல்லது விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

பை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.