(Reading time: 2 - 4 minutes)

உதிர்ந்து போன மனித நேயங்கள்

 

சாலையை கடக்க வயதான பெரியவர் தவிக்க

அந்த பாதையில் செல்லும் வாலிபர்களோ

முதியவரை கண்டும் காணமல் நடக்க

அவர்களில் ஒருவராவது அவருக்கு உதவ மாட்டாரா

என ஏங்கியது என் நெஞ்சம்

அதைக்கண்டு என் கண்கள் கலங்கியது கொஞ்சம்

காரணம் அவருக்கு யாரும் உதவவில்லை

அதனால் என் நெஞ்சம் தொட்டது துன்பத்தின் எல்லை.

அத்தனை பேருக்கும் அவ்வளவு அவசரமா?

இல்லை நமக்கு என்ன வந்தது என்ற அலட்சியமா?

நமக்கும் ஒரு நாள் முதுமை வரும்

நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்

அன்று நமக்கு பிறர் உதவிகள் தேவைப்படும்

நாம் செய்ய மறுத்த உதவிகளை எண்ணி நெஞ்சம் வாடிவிடும்

இதை அறியாத இந்த சமுதாயம்

என்ன சாதித்து என்ன புண்ணியம்

மனித நேயமற்ற மனிதர்களை

மண்புழுவும் மண்ணை வாரி தூற்றிவிடும்

மூட்டை சுமக்கும் தொழிலாளி !

தன முதுகை வளைத்து சுமையை சுமக்கிறான்

சுமைக்கு தகுந்த கூலி இல்லையென்றால்

நெஞ்சம் நொந்து வாடுகிறான்

இதில் அக்கனத்து முதலாளிக்கு அப்படி என்ன ஆனந்தமோ?

அந்த தொழிலாளியின் வயிற்றில் அடித்து மிச்சம் செய்த காசிலா?

நீமிச்சம் செய்த காசை மட்டுமா சுமக்கிறாய்?

அவனுக்கு செய்த பாவத்தின் மூட்டையையும் சேர்த்து சுமக்கிறாய்

மனிதாபிமானம் இல்லாத உன்னை

உன் மனசாட்சி கூட மதிக்காது

உனக்கு பாவ மன்னிப்பு வழங்க

சிறிதளவும் அது முற்படாது .

உண்ணும் உணவுப் பொருட்களில் கலப்படம்

அதை உண்டபின் வரும் நோயை

தீர்க்க அருந்தும் மருந்திலும் கலப்படம்

நாம் குடியிருக்க வீடு கட்டும் சிமேன்ட்டிலும் கலப்படம்

கொசுவை ஒழிக்க தெளிக்கும் மருந்திலும் தண்ணீர் கலப்படம்

இது போல் எல்லா பொருட்களிலும் உள்ளதடா கலப்படம்

ஏன் இந்த கலப்படம்? எதற்காக இந்த கலப்படம் ?

மனித நேயமற்ற மனிதா

உன் சுயநலதிர்க்காகத் தானே இந்த கலப்படம்

அது ஒருநாள் உன்னையே பாதிக்கும் போது

நீ செய்த தவறை எண்ணி உன் உள்ளம் கவலைப்படும்

இயற்கையாக விளையும் பொருட்களில் இல்லையடா கலப்படம்

தென்னையில் காய்க்கும் இளநீரில் இல்லையடா கலப்படம்

மரத்தில் கனியும் கனியின் சுவையில் இல்லையடா கலப்படம்

உன் எண்ணத்தில் மட்டும் விஷத்தன்மையை ஏனடா செய்தாய் கலப்படம்

நீ வாழ பிறரை கெடுப்பதா ?

நீதித்தன்மை அற்ற உன் செயலை நங்கள் பொறுப்பதா?

மனித நேயமற்ற மனிதா

இவ்வுலகில் வாழ உனக்கு தகுதியும் இருக்கிறதா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.