(Reading time: 2 - 3 minutes)

குருடர்கள் - புவனேஸ்வரி

ஏன் என்று தெரியாமலே இதயக் கதவை தட்டுவார்

மனம் இறுகி நின்றாலும் அன்பால் இதய அறைவாசல் முட்டுவார் !

 

காலம் காலமாய் பழைகியது போல உரையாடுவார்

வார்த்தை ஜாலத்தால் நேசத்தை கள வாடுவார் !

 

எந்நேரமும் அவரை சார்ந்திருக்க வைப்பார்

எல்லா நொடிகளையும் அவரது நினைவினால் நிறைப்பார்  !

 

என்றும் துணையிருப்பேன் என்று சத்தியம் உரைப்பார்

என் ஜீவன் நீதானென உணர வைப்பார் !

 

பேசிய நாட்கள் சலித்துவிடும்

புதிய உறவுகள் துளிர்விடும் !

 

வெறுக்கிறேன் என்பதை சொல்லாமல்

செயலில் காட்டியே கொல்லுவார்  !

 

ஒரு நாள் நெருங்கி வருவார்

மறுநாள் விலகி நிற்பார் !

 

ஒருநாள் அன்பாய் பேசுவார்

ஒரு நாள் ஆருடம் சொல்லுவார் !

 

நெடுநாள் மனதை தீமூட்டி

அதில் ரசித்து குளிர்காய்வார் !

 

நேசிக்கப்படுவதும் ஒரு போதைதான்

அவரது போதைக்கு பிறரிதயத்தில் தீ வைப்பார் !

 

உன்னதமாய் அன்பு செலுத்தும் உள்ளங்களுக்கு மத்தியில்

அன்பின் பெயர் கொண்டு இப்படியும் சில மனிதர்கள் !

 

நேசத்தை களவாடும்  திருடர்கள்

அன்பின் பார்வை அறியா குருடர்கள்!

 

இணைய வலைதளத்தில் ஆசை வார்த்தை பேசி மோசடி செய்யும் சில சுயநல பூச்சிகள் மீது உள்ள கோபமும் ஆயாசமும் தான் இக்கவிதையின் கரு .. நுரைக்கும் பாலிற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்வோம் தோழமைகளே!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.