(Reading time: 2 - 4 minutes)

கேள்விக்கென்ன பதில்? - தங்கமணி சுவாமினாதன்

திருமணத்திற்குப்பின் மாறிப்போவது....

பெண்ணின் முகவரி--இது

யாரோ எழுதிய கவிதை..ஆம்..

இது நிஜம் நிஜம் நிஜத்திலும் ..

நிஜமான நிஜம்...

முகவரிமட்டுமா மாறுகிறது?அவளின்

சிரித்த முகம் சிந்தை வயப்பட்டு..

கனவுகள் கலைந்துபோய்..

கற்பனைகள் கரைந்துபோய்..

உறவுகள் விலகிப் போய்...

உரிமைகள் அற்றுப்போய்

.

மணமான பெண்களே..

உங்களிடம் ஒரு கேள்வி..

பதிலை... ம்னம் விட்டுச் சொல்லுங்கள்..

மனசாட்சியோடு சொல்லுங்கள்..

நிஜமாய்ச் சொல்லுங்கள்..

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்..

பிறந்த வீடு செல்கின்றீர்..

அதே இடம்..அதே பீரோ..

மணமாகும் முன் நீங்கள் அதைத்..

தொட்டுத் திறந்து..மூடித்திறந்து..

இப்பொருள் வைத்து..அப்பொருள் எடுத்து..

விரும்பிய பொருளை மறைத்து வைத்து..

உரிமையாய்ப் பொருட்களை வெளியே எடுத்து..

விரியத்திறந்து கொஞ்சம் மூடி..

விரும்பியபடியெலாம் தினமும் செய்தீர்..

ஆனால் இன்று ...பீரோ அதனை..

இஷ்ட்டப்படியெலாம் திறந்து மூட..

முன்போல் அதற்குள் முகத்தை நுழைக்க..

முயலத் தோணுதா?முடியுமெனத் தோணுதா?

 

பாவம் பெண்ணவள்..

பெண்ணெனும் விதையை எங்கு எறிந்தாலும்..

அங்கேயே ஊன்றி விருட்சமாய் வளர்கிறாள்..

வளர்ந்த விருட்சத்திற்கு... அவ்விடமும்

சொந்தமில்லை..

எங்கிருந்து வீசப்பட்டாளோ அவ்விடத்தும்

உரிமை இல்லை...

 

மணமாகும் முன்..நீ இன்னொருத்தன் 

வீட்டுக்குப் போக வேண்டியவள்...

அடக்கமாயிரு..அனுதினமும் அம்மா சொல்வது..

இங்கு நீ வாழ வந்தவள்..வாயை மூடி

வாழப் பழகு..இது புகுந்த வீட்டில்

புழங்கும் வார்த்தை..

மொத்தத்தில் ஒரு பெண்..

வாயிருந்தும் ஊமையாக..

மனம் முழுதும் காயமாக..

உரிமைகளின்றி அடிமையாக...

 

பெண்கள் பலபேர் இது போல் வாழ..

சில பேர் சிரித்து சிறப்பாய் வாழ..

சிரித்து வாழ்பவர் ஆசிர்வதிக்கப் பட்டவர்..

"ஆதாம்' காலம் முதல் இன்றைய..

"ஆன்ராய்டு" காலம் வரை..பெண்ணின்..

வாழ்க்கையில் பெரிதாய் மாற்றமில்லை..

மேடையில் முழங்கினாலும்..

ஊடகத்தில் பேசினாலும்..

எழுத்தில் எழுதினாலும்..

கேட்பார் எவருமில்லை..

பெண்களுக்கு முழுதாய்ச் சுதந்திரம்..

இங்கே.. கொடுப்பார் யாருமிலை...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.