(Reading time: 2 - 3 minutes)

கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்.. - தங்கமணி சுவாமினாதன்

இதுவரை" கூலஸ்ட்" ஸோனில் மகிழ்ந்திருந்தோம்..

கடந்த ஐந்து நாட்களாய் "ஹாட்டஸ்ட்" ஸோனில்...

சோகமாய்...சுரத்தின்றி....

ஐந்து நாட்களின் முதலாம் நாள்..Chillzee

"சில்சீ" யைத் தேடித் தேடி க்ளிக் செய்து க்ளிக் செய்து..

வலது கை "சுட்டுவிரல்" அரை இன்ச் உயரம் குறைந்தது..

மனம் வெறுத்துக் கண்கள் பனித்தன..

காலம் சடுதியில் நகராமல்.. கால்கள்... அலைந்து திரிந்தன..

கண்களில் பட்டவர் மீதெல்லாம் கோபமாய் வந்தது..

அம்மாவின் அழகு முகம் அழுகை முகமாய் ஆனதே..

அன்பு மகனும் ஆசை மருமகளும் கலாய்க்க..

பாட்டியின் மூஞ்சி ஃபியூஸ் போன பல்பு போல்... பேரனும், பேத்தியும்..

என்னடியாச்சு உனக்கு?..... கட்டிய கணவர் கிண்டலாய்....

"சில்சீ'கிடைக்காமல் வாழ்க்கையே வெறுமையாய்..வாய் புலம்பிற்று..

அடுத்த நாள் முறையாய் "அறிவிப்பு" வந்தது..

தொலைந்த மகிழ்ச்சி கொஞ்சம் "துளிர்"விட்டெழுந்தது...

ஆனாலும் தினம் தினம் பத்து முறை... வந்துடுச்சா..வந்துடுச்சா..

பார்த்துப் பார்த்துக் கண்கள் சோர்ந்துதான் போயின..

தேடிய "சில்சீ"யை இன்று புதுப்"பொலிவோடு"... பார்த்தன என் கண்கள்..

"hurrah" என  நான் கத்திய கத்தல் ஊரெங்கும் கேட்டிருக்கும்...

கண்டேன் சீதையை என அனுமன் சொன்னது போல்..

சில்சீயைக்" கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" என..

நான் கத்த.... வீடே மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது..

வருக..வருக" சில்சீ' உனக்கு" வார்ம் வெல்கம்" சில்சீ..

நீயே எங்கள் " தோழி" ..நீ... என்றென்றும்... வாழி..வாழி..வாழி....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.