(Reading time: 1 - 2 minutes)

வாழ்க்கையின் மர்மம் - வின்னி

Man

என் மனதில் ஏற்படும் ஆயிரம் எண்ணங்களை எழுதுவதற்கு, கணனியின் வெள்ளை திரையை உற்றுப் பார்க்கிறேன்.

நடந்ததை, நடப்பதை , நடக்கப் போவதை எனக்குள்ளே நினைக்கும் போது, பயம் என் உணர்வுகளைக்  உட்கொள்கிறது.

என் சிந்தனைகளை,

வாழ்வின் பயத்தை,

நடக்கப்போவது தெரியாததை,  

மூடு மேகங்கள் மறைக்கின்றன.

நான் யார்? ஏன் இங்கிருக்கிறேன்? அடுத்தது என்ன?  இந்த பித்துப் பிடித்த உலகத்திலிருந்து எங்காவது ஓடி விடலாமோ என்று தோன்றுகிறது.

என் கடந்த காலத்தில் ஏதாவது வித்தியாசமாகச் செய்திருக்க முடியுமா என்று,  நான் செய்திருக்கக் கூடியவற்றை எல்லாம், கற்பனை செய்கிறேன்.

சிலவேளைகளில் நான் அதிகம் சிந்திக்கிறேனோ என்று கவலைப் படுவது போலத் தோன்றுகிறது.

ஆழமான இருண்ட வெறுமையில் மிதப்பது போன்ற உணர்வுகள்,

உள்ளிருந்து என் உடலைக் கடித்து, இரத்தத்தைக் குதறி,  தின்பது போன்ற உணர்வுகள்,  கடும் சோர்வடைந்து என் உயிரில்  தீவிரமாக தங்கி கொண்டிருந்தன,

வாழ்க்கையை கைவிடுவது  இலகுவாகத் தெரிகிறது, ஆனால் முடியவில்லை,

நான் என் கண்களை மூடி அந்த இருண்ட முகில்களில் மறைந்து விடுகிறேன்.

என்னை யாரோ அழைப்பது கேட்கிறது.

“கனவிலிருக்காமல் கணனியை மூடிவிட்டு, சாப்பிட வாரும்” என்கிறாள்  மனைவி.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.