(Reading time: 1 - 2 minutes)

கவிதை - இக்கரைக்கு அக்கரைப் பச்சை - தீபாஸ்

Grass is greener

குழந்தைக்கு வளர்ந்தவனாகிவிட ஆசை,

வளர்ந்தவனுக்கோ தன்

குழந்தைபருவத்தின்மேல் ஏக்கம.

வறுமைக்கு பணக்காரனாகிவிட ஆசை

பணக்காரனுக்கோ தன்

வறுமையில்கிடைத்த தூக்கத்தின் மீது ஏக்கம் .

இளமைக்கு கல்யாணமாகிவிட ஆசை

கல்யாணமானவனுக்கோ தன்

இளமையின் துடிப்பின்மீது ஏக்கம் .

குளிருபவனுக்கு கதகதப்பாகிவிட ஆசை.

கதகதக்கும்போதோ தன்

அறையை குளிரூட்ட ஏக்கம்.

படித்தவனுக்கு அயல்நாட்டு பணம் கிடைக்க ஆசை

அயல்நாட்டிலிருப்பவனுக்கோ தன்

நாட்டின் சொந்தத்தை காண ஏக்கம்.

கிடைக்காததை அடைய ஆசையும்

இழந்ததன்மீது ஏக்கம் கொள்ளுபவனே

கலியுக தோல்வியாளன் .

மனதின் ஆசைகளை அடக்கவும்

ஏக்கம்தனை புளிக்குமென ஒதுக்குபவனே.

எக்காலத்திலும்  வெற்றியாளன் .

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.