ஓய்வில்லாமல் பேசிக் கொண்டே இருந்தாலும்
என்னால் பதில் அளிக்க முடியாத பந்தம் !
யார் நீ?
நினைக்கும்போதெல்லாம் என்னோடு நிற்பதுமில்லை
நான் துவண்டு விழுகயில் என்னை விட்டுவிலகுவதுமில்லை
யார் நீ?
இனிக்க இனிக்க பேசுவதுமில்லை
நான் பேச நினைப்பதை தடுப்பதுமில்லை
யார் நீ?
கைப்பிடித்து உடன்வர தயாராகவும் இல்லை
கைப்பற்றி தூக்கிவிட தயங்குவதும் இல்லை
யார் நீ?
மனம் விட்டு எதையும் உரைப்பதுமில்லை
என் மயக்கங்களுக்கு முகவரியாவதை மறுக்கவுமில்லை!
யார் நீ?
நாகரீகம் என்று சொல்லி தள்ளியும் போகிறாய்
நான் கொஞ்சம் கண்ணீர் சிந்தினாலும் தாவி அணைக்கிறாய்!
காரணம் சொல்லாமல் ஆட்டி படைக்கிறாய்,
என் காரியங்களுக்கெல்லாம் (கா)ரணமாகிறாய்!
உரிமையில்லை ஆனால் உன் வசம் வாழ வேண்டும்!
பந்தமில்லை ஆனால் உன் பாசம் மட்டும் வேண்டும்!
சொந்தமில்லை ஆனால் என் சொர்க்கம் நீயாகிட வேண்டும்!
என்னவனே,
பெயரே வேண்டாம் நம் உறவுக்கு!
ஆனால் நம் பெயர் சொல்லிக் கொள்ள
நமக்காக நாம் வேண்டும்!
வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு ஒரு ஹிந்தி பட காட்சியை பின்னணியாய் கொண்ட கவிதையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
“Pardes” என்ற படத்தில் நான் மிகவும் ரசிக்கும் காட்சியிது. நட்பிற்கும்,காதலுக்கும் நடுவில் ஒரு வெகுளித்தனம் கொண்ட அன்பு உள்ளது. அந்த அன்பினை பற்றிக் கொண்டே கதாநாயகனும், நாயகியும் பயணிக்க, ஒரு காட்சியில்,தன்னை சுற்றியிருக்கும் பொய்மைகளின் வீர்யம் தாங்க முடியாமல் உடைந்து போகிறாள் நாயகி. அவளை சமாதானப்படுத்த முடியாத நாயகன் இயலாமை தந்த கோபத்தில்
“எப்படிப்பட்ட அன்புத்தான் வேண்டும் உனக்கு ?”என்று நொந்து கொள்ள,
“உன்னையே கேள்! நீ பிறரிடம் காட்டும் விதமான அன்பே வேண்டும்”என்று கூறி நாயகனை வாயடைக்க வைக்கிறாள். மேலும்,
“நீயாவது என்னோடு இருப்பாய் தானே?” என்று கெஞ்சலாய் நாயகி கேட்டிட, முடியாதென மௌனமாய் அங்கிருந்து சென்ற நாயகன் கடைசி நொடியில் தலையை மட்டும் நீட்டி “சரி” என்று சமிக்ஞை செய்யவும் நாயகியின் முகத்தில் அரும்பிய புன்னகை காண்பவர் கண்களையும் சேர்கிறது. அதே புன்னகையுடன் இன்று விடைபெருகிறேன்..
Pardes is one of my fav movies
Ninga select seithiruka scene-ku perfect-a fit agura sweet lines
Well expressed