(Reading time: 7 - 14 minutes)

மீராநந்தனுக்கு அழைக்க சொல்லிய மனைவியிடம் "மருத்துவமனையில் ஏதாவது முக்கியமான வேலையா இருப்பான் மா. நீ கவலைப்படாம தூங்கு" என்று ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார் நந்தகோபாலன். "இல்லை மாமா, அவன் வீட்டுக்கு வர நேரமாச்சுனா எனக்கு கூப்பிட்டு சொல்லிடுவான். ஆனா பாருங்க இப்போவே மணி 11 ஆச்சு... இன்னைக்கு அவன் எதுவுமே சொல்லல. அது தான் எனக்கு பயமா இருக்கு." என்ற மனைவியை சமாதானப்படுத்த தோன்றாமல் மீராநந்தனுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்குமே நந்தனின் செயல் யோசனையை உண்டாக்கியது. 

யோசனையில் மூழ்கி இருந்தவனை அலைபேசியின் ஒலி மேலும் யோசிக்க விடாமல் தடுத்தது. அழைப்பவர் தன் தந்தை என்பதை அறிந்து மணியை பார்த்தான். ஏனெனில் அவனது தந்தை அவனுக்கு அவசியமின்றி அழைக்கமாட்டார். மணி இரவு 11 என காட்ட அவன் புத்தியில் அப்பொழுது தான் தன் தாய்க்கு அழைத்து எந்த விபரத்தையும் கூறவில்லை என்பதே உரைத்தது. அழைப்பை ஏற்று "அப்பா" என்றான். மறுமுனையில் "ஏதாவது இம்பார்ட்டன்ட் கேசா நந்து?" என்றார்.

"ஆமா பா. வானதிக்கு டெலிவரி டைம்... கிருஷ்ணாவும் இங்க தான் இருக்கா.... அதுதான் ஏதோ யோசனையில் அம்மாக்கு கூட கூப்பிடல." _ நந்து

" இப்போ வானதி எப்படி இருக்கா" _ NG

"கொஞ்சம் கிரிடிகல் தான் பா. நம்ம சங்கரி மேடம் தான் பார்த்துட்டு இருக்காங்க" _ நந்து

"பத்திரம் நந்து நல்லா பார்த்துக்கோ ரெண்டு பேரையும்" _ NG 

"சரி பா பார்க்குறேன். நான் வீட்டுக்கு வர லேட் ஆகும். அம்மாவை பயப்படாம இருக்க சொல்லுங்க பா. நான் அப்பறம் பேசுறேன்". _நந்து. 

"உங்க அம்மா கிட்ட நான் பேசிக்குறேன் நீ பாரு" என்றபடியே அலைபேசியை துண்டித்தார் நந்தாகோபாலன். அவரது ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்த அகல்யாவின் முகத்தில் பல யோசனை ரேகைகள்.

 

 

(மகிழ்ந்திரு)

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.