(Reading time: 12 - 24 minutes)
Irulum oliyum
Irulum oliyum

கெட்டிமேளம் முழங்கியது. ஒரு தாம்பாளத் தட்டில் வெற்றிலை, தேங்காய் வகையறாக்களுக்கு மேலே இருந்த தாலியை, கூட்டத்திற்கு இடையே கொண்டு போய் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டு, மணமேடைக்குப் போய், தாலியை, பெருமாள், மணமகனுக்குக் கட்டப் போவது போல், அவன் கழுத்துப் பக்கமாக எதேச்சையாகக் கொண்டு போய்விட்டு, பிறகு மருமகனாகப் போகிறவனின் கையில் கொடுக்க, கூட்டம் சிரிக்க, மேளம் ஒலிக்க, மணமகள் கழுத்தை ஒருவர் பிடித்து நீட்ட தாலி கட்டப்பட்டு விட்டது.

அது, ஒரு சீர்திருத்தக் கல்யாணம். ராகுகாலம், எமகண்டம் பார்த்து, பக்குவமான சமயத்தில் நடத்தப்படும். அப்படியும் ஆகாமல், இப்படியும் ஆக முடியாமல் போன ஒரு ‘கலப்படக்’ கல்யாணம். நெல்லை மாவட்டத்தில், அருகு அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் குடியிருக்கும் இந்தப் பகுதியில், இப்படிப்பட்ட கல்யாணங்கள் தான் நடக்கின்றன. இருப்பினும் இந்தக் கல்யாணம், ஓரளவு வேறுபட்டது.

பெருமாளின் பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உறவு முறைச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி யிருக்கிறார்கள். பணக்காரர்கள் ஆட்டிப் படைக்கும் இந்தச் சங்கத்தில், ஏழைகள் வீட்டுத் திருமணங்களில், சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியாக வேண்டும். இது, ஒரு கட்டாய ‘இன்வைட்டேஷன்’. இல்லையானால், அந்த ஏழைகள், தள்ளி வைக்கப்பட்டு விடுவார்கள்.

நிர்வாகிகள், ஆளுக்கொரு வார்த்தை பேசுவதில், அதுவும் வாழ்த்திப் பேசுவதில் என்ன கோளாறு என்று கேட்கலாம். கோளாறே, அங்கே தான் இருக்கிறது. முதலாவதாக ஆளுக்கொரு வார்த்தை பேசாமல் ‘ஊமைக்கு ஊறுவாயன் சண்டைப் பிரசண்டன்’ என்பது போல், ஒவ்வொரு பணக்கார நிர்வாகியும், தன் பவுன்கார மோதிரங்களையும், டெர்லின் சட்டைப் பைகளுக்குள் தெரியும் நூறு ரூபாய் நோட்டுக்களையும், ஏழை பாழைகள் தொடாமலே பார்க்க வேண்டும் என்பது போல், அரைமணி நேரமாவது பேசுவார். இந்த அரை மணிக்குள், “அதாவது... அதாவது” என்ற வார்த்தை மட்டும் ஆயிரந்தடவை வரும். இரண்டாவதாக, நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகம். பணக்காரர்கள் மட்டும் நிர்வாகிகளாக இருப்பதா என்று ஒரு பேச்சு வந்த போது, அந்த தந்திரக்கார நிர்வாகிகள், ‘போர்ட் ஆப் ரெவின்யூ’ என்பது மாதிரி, வருவாய்க் குழு, மலர்க் குழு என்று இரண்டு குழுக்களைப் போட்டு, சில வாயாடி ஏழைகளை அவற்றில் போட்டு விட்டார்கள். ஆக, அந்த வ.கு.உ. (வருவாய்க் குழு உறுப்பினர் - இப்படித்தான் அழைப்பிதழில் போட்டிருந்தது), ம.கு.உ. (மலர்க் குழு உறுப்பினர்) செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், உதவிச் செயலாளர், நிர்வாகச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர், உதவித் தலைவர்,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.