(Reading time: 6 - 11 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 38 - சரோஜா ராமமூர்த்தி

2.38. கல்யாணப் பேச்சு

  

நிலவின் அமுத வெள்ளத்தில் மூழ்கியிருந்த தோட்டத்தில் விருந்து நடைபெற்றது. அங்கங்கே வர்ணவிளக்குகள் சுடர் விட்டன. ஆனால் கூட்டம் - அதாவது விருந்தினர்கள் - அதிகம் இல்லை. பவானியுடன் படித்தவர்கள் டாக்டர் காமாட்சி. இன்னும் சில முக்கியமான நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். ராதாதான் பெண்களை வரவேற்க நின்றிருந்தாள். உள்ளத்தில் கொண்டிருந்த துயரத் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். அந்தப் பெண் ஊராருக்குப் பயந்து கொண்டு சில மாதங்கள் வெளியில் எங்குமே போகாமலிருந்தாள். படிப்படியாக அவள் மனம் மாற ஆரம்பித்தது. அவள் அப்படி வீட்டோடு அடைபட்டுக் கிடப்பதால், மூர்த்தியின் தரம் சமூகத்தின் கண்களில் உயர்ந்து காணப்படாது என்கிற உண்மையை ராதா புரிந்து கொண்டாள். அவன் புரிந்த குற்றங்கள் எல்லோருக்கும் தெரியும். இனி தான் மட்டும் வீட்டி னுள் பதுங்கிக் கிடப்பதில் என்ன லாபம் என்று தீர்மானித்து ராதா அவ்வப் போது வெளியில் போய் வர ஆரம்பித்தாள். பவானிக்காக விருந்து நடப்பதை எண்ணி ராதா அகமலர்ச்சியுடன் அதில் கலந்து கொண்டாள்.

  

விருந்து அமர்க்களமாக நடந்தது. பவானிக்கு இவை யாவுமே புதுமையாக இருந்தன. சங்கோஜத்தினால் அவள் குன்றிப் போனாள்.

  

கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்து உட்கார்ந்திருந்த அவள் அருகில் காமாட்சி வந்தாள். அன்புடன் அருகில் உட்கார்ந்து, 'பவானி! நீங்களும் டாக்டரும் சம்பந்திகள் ஆகப் போகிறீர்களாமே?" என்று விசாரித்தாள்.

  

”ஆமாம் டாக்டர். எனக்கு நேற்று வரையில் ஒன்று தெரியாது! நேற்று ராத்திரி அண்ணா வெளியே போய்விட்டு வந்ததும், விஷயத்தை என்னிடம் சொன்னார்" என்றாள் பவானி.

  

பெண்மணிகள் இருவர் முகத்திலும் சந்தோஷம் நியாபியிருந்தது. விருந்து முடிந்ததும், முக்கியஸ்தர்கள் வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். மிஞ்சியிருந்தவர்கள் மிகச் சிலரே. தோட்டத்தில் ஒரு கல் பெஞ்சியில் நான்கைந்து பேர்கள் உட்கார்ந்தார்கள். நாகராஜன் அருகில் கிடந்த மேஜை இருந்த வெற்றிலைத் தட்டிலிருந்து ’பீடா' ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். அவன் பீடாவை கையில் எடுத்ததும் டாக்டர் காமாட்சி அவனைப்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.