(Reading time: 6 - 12 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

கையில் பிரித்து வைத்துக் கொண்டிருந்த அல்வாப் பொட்டலம் பிரித்தபடியே இருந்தது.

  

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

  

நர்மதாவின் மனசில் ஒரு சலனம் ஏற்பட்டிருக்கவேண்டும். "சர்ப்பிட்டுட்டுப்போறேளா?" என்று மெதுவாகக்கேட்டாள்.

  

"உம்" என்றான் பட்டப்பா.

  

அலமாரியின் கீழே இருந்த தட்டை எடுத்து வைத்துப்பரி மாறினாள் அவள். பரிந்து பரிந்து சாதம் போட்டாள். மள மளவென்று சாப்பாடு ஆயிற்று.

  

"கிளம்பட்டுமா நர்மதா?"

  

""உம்... கிளம்புங்கோ இன்னும். கொஞ்ச நாழியானா எங்கம்மா வந்துடுவர். அப்புறமா அண்ணாவும், மன்னியும் வருவா..." மறுபடியும் அவன் அவள் அருகில் நெருங்கி வந்து தீன்றான்.

  

ஓ! இது என்ன ஆசை? ஆண்பிள்ளை என்று உருவத்தில் இருந்து விட்டால் போதுமா? நர்மதா வெடுக்கென்றுமுகத்தைத் திருப்பிக்கொண்டு வாசற்கதவைத் திறந்தாள்.

  

அவன் படியிறங்கி, தெருவில் நடந்துசென்றபோது அவள் மனம் வேதனைப்பட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. ஒரு ஆண்மகனின் நெருக்கம் அவள் மீது நெருப்பாகத் தகிப் பதை அவள் உணர்ந்தாள். மட மடவென்று பலகாரப் பொட்டலங்களை எடுத்துத் தெருவில் வீசினாள். புஷ்பத்தை எடுத்து எங்கோ வைத்து விட்டாள். பட்டப்பா வந்ததோ போளதோ தெரியாமல் கும்மட்டியைப் பற்றவைத்து குறைந்திருந்த சாதத்துக்குப்பதிலாக சமைத்தும் வைத்தாள்.

  

அம்மா, அண்ணா மன்னி வருவதற்கு வெகுநேரம் இருந்தது. காமரா அறைக்குள் சென்று ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். கடைத்தெருவிலிருந்து போகிறவர்கள் பூப்பொட்டலங்களும், காய்கறிகளும் வாங்கிப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.