மில்லம்மா. செய்யாத ஒரு குற்றத்தை, அதிலும் கொலைக் குற்றத்தை செய்ததா போலீஸ், ஒரு பெரிய மனுஷன் தூண்டுதல்ல பழி போட்டிருக்கும்மா. இப்பவும் கீழ போலீஸ்காரரை ஆட்டோவில் காக்க வைச்சுட்டு வந்திருக்கேம்மா. நீங்க மட்டும் இப்ப எங்ககூட வராட்டா, இவள, ராத்திரியோட ராத்திரியா ஏதாச்சும் செய்துடுவாங்கம்மா. ஏய் சரோ, நான் முன்னால ஒன்கிட்ட அடிக்கடி சொல்லுவேன் பாரு, அந்த அம்மா இவங்கதான். இன்னிக்கு என்னை என் ஆம்படையான் தெருவில போட்டு உதைக்காம இருக்கான்னா, இதுக்கு இவங்கதான் காரணம். இப்பக்கூட இவங்க பேர் எனக்குத் தெரியாது; ஆனா, அம்மாவுக்கு பேர் எதுக்கு?"
"தப்பும்மா! எனக்கும் உனக்கும் இதோ இங்க இருக்கவங்களுக்கும் அம்மா நம்ம மன்றம்தான். என்றைக்கு தனிப்பட்டவங்க ஒரு அமைப்பைவிட உயரமா தெரிய ஆரம்பிக்கிறாங்களோ, அப்பவே அந்த அமைப்போட உயிர்த்துடிப்பு போயிடும். நாங்க அரசியல் கட்சிகள் மாதிரி இல்ல. நாங்க எல்லோரும் ஒருவர் தலைமேல் ஒருவர்ஏறி நின்னாலும் இந்த மன்றம் தான் அதிக உயரம்.”
"சரிம்மா. இந்தப் பொண்ணுக்கு..."
அந்தம்மாவும், அங்கு இருந்த இதரப் பெண்களும், பெஞ்சிகளில் இருந்த பஞ்சைப் பராரிகளும் சரோசாவை ஒருசேரப் பார்த்தார்கள். எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என்பதுபோல் நாற்காலிப் பெண்கள் அவளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பார்த்தபோது, பெஞ்சிப் பெண்களோ, கஷ்டம் என்பது தங்களுக்கு மட்டும் உரியதல்ல என்பது போல், அவளை கண்சாய்த்துப் பார்த்தார்கள். ஆனால் சரோசாவோ, "தொரண்ணே, தொரண்ணே” என்று வாய் கூவிக் கொண்டிருக்க, அதில் மட்டும் உயிரை வைத்திருப்பவள் போல் அசைவற்று நின்றாள்.
அவளையே பார்த்தபடி அந்தம்மா மேஜையில் கையூன்றி எழுந்தாள். அவள் அருகே போனாள். அவள் மோவாயை நிமிர்த்தினாள்.வெறுமையாய் கிடந்த அவள் கண்களை தலையோடு சேர்த்துத் தடவி விட்டாள். அவள் தோளில் கை போட்டபடியே மேஜையோரம் இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டு ஆவேசமில்லாமலும், அதே சமயம் ஏனோ தானோ என்று இல்லாமலும் தன்னம்பிக்கையோடு ஆறுதல் சொன்னாள்:
"இந்தா பாரும்மா, உன் மேல தப்பில்லன்னா எந்த போலீசும், எந்த ரவுடியும், எந்த கோர்ட்டும்