சவால்விட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. மண்ணில் பிறந்தது, பெண்ணாய்ப் போனது, ஆத்தா ஓடியது, அவள் தாத்தா வளர்த்தது, எடுபிடி வேலை செய்தது, ஏளனமாய் நடத்தப்பட்டது, போலீஸ் தொல்லைகள், போக்கிரிகளின் சீண்டல்கள், அதனால் துரையண்ணன் மூலம் அண்ணாத்தையிடம் அடைக்கலமானது, சாராய உறவுகள், இளங்கோவுடன் போட்ட சண்டை, அவனை ஆளை வைத்து அடித்துப் போட்ட அடாவடித்தனம், அவனால் மனுஷியாகி, இப்போது ஆபீஸ்காரர் களால் மீண்டும் பழைய நிலைக்கப் போக வேண்டும் என்ற எண்ணமும், அப்படிப் போய்விடுவோமோ என்ற அச்சமும் கலக்க, அவள் ஒன்று விடாமல் சொன்னாள். அவள் அனுபவித்த துயரங்களைக் கேட்கக் கேட்க அங்குள்ள அத்தனை பேருக்கும் காதுகள் போதாது என்பது போல், பலர், இரண்டு கைகளையும் தத்தம் காதுகளுக்கு மேல் காதுகளாகக் குவித்துப் போட்டார்கள்.
அவள், தனது கதையை, சுருக்கியும் சொல்லாமல், விரியவும் விடாமல் ஒப்பித்தபோது, அவள் சொல்வதை ஆரம்பத்தில் இப்படித்தான் எல்லோருக்கும் நடக்குது என்ற தோரணையில் பார்த்த அந்த அம்மா, இறுதியில் முகம் வெளிறிப் போனாள். அவள் வார்த்தையில் தொனித்த சத்திய ஒலியில் கட்டுண்டவள் போல், சரோசாவின் முகத்தைத் துடைத்துவிட்டு, கண்ணீரைச் சுண்டி விட்டாள். பிறகு, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டாள்:
“நீங்க என்ன நினைக்கீங்க?”
தாழம்பூ
"அந்த அண்ணாத்தையை இப்பவே கழுத்தை நெறிச்சுக் கொன்னு போடணும் போலத் தோணுது."
"கதையில வாரது மாதிரியே வருதே?"
அந்தம்மா, சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள் :
“இந்தப் பெண்ணோட பிரச்சினை நமக்கு ஒரு சவால் பிரச்சினை மாதிரி. இதுவரைக்கும் கொலை செய்யப்பட்ட பெண்களைப் பற்றியும், அப்படி கொலை செய்யப்படப் போன பெண்களைப் பற்றியும்தான், நாம் விவகாரம் செய்திருக்கோம். இப்போத கொலைப்பழியை