(Reading time: 14 - 27 minutes)
Vata malli
Vata malli

லட்சுமிக்கா. பர்ஸ்ல எவ்வளவு பணம் இருக்குது. கொண்டுவா...”

  

கூனிக் குறுகிப்போன சர்தார்ஜி குடும்பத்தை ஆறுதலோடு பார்க்கிறாள். பிறகு சுவரில் தொங்கிய சர்தார்ஜி படத்தை இவளே எடுத்து ஜாக்கெட்டின் பின் பக்கம் வைத்துக்கொண்டு புறப்படுகிறாள். இங்கே வந்ததுக்கு அத்தாட்சி... அந்த சர்தார்ஜி இதைப் பார்த்தால்தான் சாப்பிடவாவது செய்வார்.

  

மேகலை தோழிகளோடு திரும்பி நடக்கிறாள். எங்கிருந்தோ இரண்டு சர்தார்ஜிகள் ஒரு வீட்டைப் பார்த்து ஓடுகிறார்கள். அங்கிருந்து இரண்டு தாடி வைக்காத ஆண்கள் ‘ஜல்தி ஆவ், ஜல்தி ஆவ்’ என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பக்கமாய் ஓடிப்போய், அவர்களை இழுத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குக் கொண்டு போகிறார்கள். ஜன்னல் வழியாய்ப் பார்த்த பெண்கள் சந்தோஷமாகத் தலையை ஆட்டுகிறார்கள். மானுட மரத்தின் கிளைகள் வெட்டப்படுகின்றன. ஆனாலும் அதன் வேர்ப்பிடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது என்பது போன்ற தியாக பாதுகாப்புக்கள். சுயநல மறுப்பின் அடையாளங்கள், இப்படிப்பட்ட காட்சிகளும், சுயம்புவுக்கும், தோழிகளுக்கும், ஆங்காங்கே கிடைக்கத் தான் செய்தன.

  

அவர்கள் அங்குமிங்குமாய்ச் சுற்றி, தெருக்களின் பிணத்தோடு பிணமாய்க் கிடந்த அபலைப் பெண்களைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். அலங்கோலமாய்க் கிடந்தவர்களின் கால்களைச் சரிப்படுத்தி வைத்தார்கள். லேசு லேசான மனித நடமாட்டம் தெரிந்தது. இவர்களைப் பார்த்து பலர் வீதிக்கு வந்தார்கள். இவர்களிடமே விவரம் கேட்டார்கள். வன்முறை பெருத்தபோது மானுடம் சிறுத்துப் போவதற்குக் காரணமான ‘தெருவோருக்கும் உதவாத சிறிய வீணர்கள்’. வீணர்களில் ஒருத்தர், இவர்களிடம் கேள்வியும் பதிலுமாய்ப் பேசினார்.

  

பஞ்சாபிலிருந்து. இந்துக்களை அப்படியே வெட்டி வெட்டி சர்தார்ஜிகள் ரயிலுல அனுப்பி வைக்காங்களாம். டில்லிக்கு தண்ணிர் கொடுக்கிற யமுனை நதியில விஷத்தைக் கலந்துட்டாங்களாம். டில்லியில் பல தொட்டிகளில் விஷத்தைப் போட்டுக் கலக்கிட்டாங்களாம். கனாட்பிளேஸ்ல ஐம்பதுபேர் செத்துட்டாங்களாம். இன்றைக்குக் காலையில் பல இடத்தில ஒட்டுன போஸ்டர்ல படிச்சேன். தண்ணிய குடிக்கவே பயமா இருக்கு. ஆனால் தாகம். ஒங்க வீட்ல பழைய தண்ணிர் இருக்குமா. கிடைக்குமா.”

  

மேகலை அந்த ஆசாமியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள். பக்கத்திலேயே மனிதப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.