(Reading time: 14 - 28 minutes)
Vata malli
Vata malli

உனக்குன்னு ஏதாவது செய்யாட்டால், என் ஆத்மா சாந்தியடையாது. என் ஆத்மா சாந்தியடையணும்னு நீ விரும்புனால், இதை ஏத்துக்கணும்...”

  

சர்தார்ஜி அவள் மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, புறப்பட்டார். அவருக்குக் கார் கதவைத் திறந்துவிட்டு, காரிலேற்றி, வழியனுப்பிவிட்டுத் திரும்பிய மேகலை, ‘எங்கம்மா கங்காதேவி சொத்தே நாலு தலைமுறைக்குப் போதும். இதுக்குமேல எதுக்கு?’ என்று சொன்னபடியே ஆலமரத்தடியில் உட்கார்ந்தாள். இந்தப் பேச்சை மட்டும் அவள் தோழிகள் காதில் வாங்க மறுத்தனர்.

  

இதற்குள், இன்னொரு கூட்டம் எந்தக் கலப்பும் இல்லாத அவர்களின் கூட்டம்.

  

விவேக்புரியில் ஒரு ஆபீஸர்மேல பஸ் மோதி இறந்துட்டாரு...”

  

சரி, கூடமாடப் போய் அழுங்க, காசு கொடுத்தால் வாங்கப்படாது...”

  

நம்ம ஏரியாவுக்குள்ள மோசினி குரு அலி, சேலா அலிகளை அனுப்பி வைக்கான். நேற்று கொஞ்சம் கலகலப்பு...”

  

அதெல்லாம் கூடாது. இன்னிக்கு மட்டும் அந்த ஏரியாப் பக்கம் போகாதீங்க. மோசினிகிட்ட நான் பேசுறேன்.”

  

இவள் மூணு தடவை ஆள மாத்திட்டாள். முதலாவது ஆள் அழுகிறான். ரெண்டாவது ஆள் பொருமுறான்...”

  

வாசலில் நின்ற லட்சுமி புகார் செய்தவளைக் கண்டித்தாள்.

  

ஏண்டி, குதிரைக் கொண்டை, தராதரம் தெரியாமல் இதைப்போய் அவள்கிட்ட சொல்றயடி. இவள் மூணாவது ஆம்பளையாவது மாற்றாமல் இருக்கச் சொல்லு...”

  

மேகலை மீண்டும் எழுந்தாள். அதற்குள் ஒரு கார். எந்த நல்ல காரியத்திற்கும் அவளிடம் விபூதி குங்குமம் வாங்கிக்கொண்டு போகும் கார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு நூறு ரூபாய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.