(Reading time: 14 - 28 minutes)
Vata malli
Vata malli

காட்டிட்டு... சப்-இன்ஸ்பெக்டர் மாறிட்டார். ஆனா, சவடால்தனம் போகலை. ஒன்கிட்ட பயந்து பயந்து பேசினாள் பாரு, லுங்கிக்காரி, அவள நேற்று போலீஸ் வந்து அடிஅடின்னு அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. கஞ்சா கடத்துனாள்னு திட்டு. அவளுக்குக் கஞ்சியைத் தவிர கஞ்சா தெரியாது. இப்போ எங்க வச்சிருக் காங்கன்னும் தெரியலை. நான் போனாலும், பழைய பகையில என்னையும் ஏதாவது செய்யலாம். இப்படி போலீஸ் பொய் வழக்கு ஒரு பக்கம். கோர்ட்லகூட எடுத்த எடுப்புலேயே இவ்வளவு ரூபா அபராதம்னு சொல்றாங்களே தவிர தீர விசாரிக்கிறதில்ல. நமக்கு ரெண்டு பக்கமும் அடி...

  

நீ சொன்னது மாதிரி இது தனியாச் செய்யுற காரியம் இல்ல. ஒரு சங்கம் செய்யவேண்டிய காரியம். அதனால, நீ உடனே வரணும். இல்லாட்டால், நாங்க கூண்டோட கைலாசம்தான். கால் விலங்கோட கை விலங்கும் சேர்ந்துடும்...”

  

ராசாத்தி மாதிரி வாழ்கிற ஒன்னை, இந்த மாதிரி சிக்கலுல சிக்க வைக்கிறதுக்கு மனசுக்கே கஷ்டமாக இருக்குது. அதே சமயம் ஒன் மனசும் எனக்குத் தெரியும்.”

  

சுயம்பு, மேகலையானாள்.

  

வேட்டியையும் சட்டையையும் வீசிப் போட்டு விட்டு பெண்ணாடைகளைக் கட்டிக்கொண்டாள். உடம்பைச் சுற்றிய புடவை வெளிர் மஞ்சளா அல்லது துளிர் பச்சையா என்பதைக் கண்டுபிடிப்பதில், அவளுக்கு அக்கறையில்லை. குருவக்காவின் கடிதத்தை ஜாக்கெட்டுக்குள் திணிக்கிறாள். அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்.

  

டிக்கட்ட கான்ஸல் செய்ய வேண்டிய அவசியமில்ல நீலிமா... கார்ல சூட்கேஸ்களையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்து வை. மெட்ராஸ்ல நிறைய வேலை இருக்கு. ஜல்தி நீலிமா... ஜல்தி...”

  

எல்லோரும் திகைத்துப் பார்க்கிறார்கள். மூடு மந்திரமாய் பேசிய மேகலை ஆத்திரம் கொடி கட்டிப் பறக்க, ஆவேசம், கனல் கட்டிக் கொதிக்கக் கொதிக்கச் சொல்கிறாள்.

  

நாங்க திரும்பிவர ஒருவாரம் ஆகலாம். ஒரு வருஷம் கூட ஆகலாம். எங்கே இருக்கப் போறோம்னு எங்களுக்கே தெரியாது. சீக்கிரமாய் திரும்பி வந்தாலும் அடிக்கடி மெட்ராஸ்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.